» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பாகிஸ்தானில் நிதி நெருக்கடி: அரசு ஊழியர்கள் சம்பளத்தை 10 சதவீதம் குறைக்க பரிசீலனை!

வெள்ளி 27, ஜனவரி 2023 12:14:21 PM (IST)

பாகிஸ்தான் நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக  அரசு ஊழியர்கள் சம்பளத்தை 10 சதவீதம் குறைக்க அரசு பரிசீலித்து வருகிறது. 

பாகிஸ்தானில் அன்னிய செலாவணி கையிருப்பு குறைந்து வருவதால் அந்த நாடு மிகவும் மோசமான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இதனால் நிதி பற்றாக்குறையை சமாளிக்க சர்வதேச நிதியத்திடம் கடன் கேட்டு பாகிஸ்தான் மான்றாடி வருகிறது. ஆனால் சர்வதேச நிதியம் விதித்துள்ள நிபந்தனைகளை நிறைவேற்ற முடியாததால் கடனை பெறுவதில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது.

இந்த நிலையில் சர்வதேச நிதியத்தின் நிபந்தனையை நிறைவேற்றுவதற்கு ஏதுவாக நாட்டில் சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிவு செய்த பிரதமர் ஷபாஸ் ஷெரீப் தேசிய சிக்கனக் குழுவை அமைத்தார். இந்த குழு அரசு ஊழியர்களின் சம்பளத்தை 10 சதவீதம் குறைப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் அமைச்சகங்களின் செலவினங்களை 15 சதவீதம் குறைப்பது, மத்திய மந்திரிகள், மாகாண மந்திரிகள் மற்றும் ஆலோசகர்களின் எண்ணிக்கையை 78-ல் இருந்து 30 ஆக குறைப்பது போன்ற நடவடிக்கைகளும் பரிசீலனையில் இருப்பதாக சொல்லப்படுகிறது. தேசிய சிக்கனக் குழு விரைவில் தனது பரிந்துரைகளை இறுதி செய்து, பிரதமர் ஷபாஸ் ஷெரீப்பிடம் அறிக்கையை தாக்கல் செய்யும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory