» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஆப்கானில் நிறுத்தப்பட்ட 20 திட்டங்களை இந்தியா மீண்டும் தொடங்கும்: தலிபான்கள்

வியாழன் 1, டிசம்பர் 2022 5:43:05 PM (IST)

ஆப்கானிஸ்தானில் போர் காரணமாக நிறுத்தப்பட்ட குறைந்தபட்சம் 20 திட்டங்களையாவது இந்தியா மீண்டும் தொடங்கும் என்று தலிபான்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

கடந்த ஜூன் மாதம் ஆப்கானிஸ்தானுடன் தனது தூதரக உறவை புதுப்பித்துக் கொண்ட இந்தியா, ஆப்கன் தலைநகர் காபூலில் உள்ள தூதரகத்துக்கு தொழில்நுட்பக் குழுவை அனுப்பியிருந்தது. 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய நிலையில், பாதுகாப்புக் காரணங்களுக்காக இந்தியா தனது தூதர்களை திரும்பப் பெற்றுக் கொண்டது.

இந்த நிலையில்தான், ஆப்கானிஸ்தானில், இந்தியா செய்து கொண்டிருந்த குறைந்தபட்சம் 20 திட்டங்களையாவது மீண்டும் தொடங்கும் என்று ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. இந்த புதிய திட்டங்கள் தொடங்கி முடிக்கப்பட்டால், நாட்டில் ஏழ்மை மற்றும் வேலைவாய்ப்பின்மை ஒழியும் என்று எதிர்பார்ப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory