» செய்திகள் - விளையாட்டு » உலகம்
பாஜக ஆட்சியில் இருக்கும் வரை இந்தியா-பாக். இடையே நல்லுறவு ஏற்படாது : இம்ரான்கான்
செவ்வாய் 22, நவம்பர் 2022 4:23:57 PM (IST)
பா.ஜனதா ஆட்சியில் இருக்கும் வரை பாகிஸ்தான்-இந்தியா இடையே நல்லுறவு ஏற்பட வாய்ப்பில்லை என இம்ரான்கான் கூறினார்.
இங்கிலாந்து தி டெலிகிராப் பத்திரிகைக்கு பேட்டி அளித்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் கூறியதாவது:- இந்தியாவும், பாகிஸ்தானும் ஒருவருக்கொருவர் வர்த்தகத்தை நிறுவினால் அடையக்கூடிய பொருளாதார நன்மைகள் மிகப் பெரியதாக இருக்கும். ஆனால் காஷ்மீர் பிரச்சினை முக்கிய தடையாக இருந்தது. இப்பிரச்சினையை தீர்ப்பது சாத்தியம் என்று நான் நினைக்கிறேன்.ஆனால் பா.ஜனதா அரசாங்கம் மிகவும் கடுமையானது. அவர்கள் பிரச்சினைகளில் தேசியவாத நிலைப்பாட்டை கொண்டுள்ளனர். பாகிஸ்தான்-இந்தியா இடையே நல்லுறவை விரும்புகிறேன். ஆனால் இந்தியாவில் பா.ஜனதா ஆட்சியில் இருக்கும் போது அது நடக்க வாய்ப்பில்லை. தேசியவாத உணர்வுகளை தூண்டிவிடுவதால் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண வாய்ப்பில்லை என்ற நிலை ஏமாற்றம் அளிக்கிறது.
எங்களை பொறுத்த வரை காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வுகாண பாதையை அவர்கள் (இந்தியா) வைத்திருக்க வேண்டும் என்பதுதான். 2019-ம் ஆண்டு ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட போது இந்தியாவுடனான உறவில் மேலும் விரிசல் ஏற்பட்டது.
பயங்கரவாதம், விரோதம் மற்றும் வன்முறை இல்லாத சூழலில் பாகிஸ்தானுடன் இயல்பான அண்டை நாடுகளின் உறவுகளை விரும்புவதாக இந்தியா பலமுறை பாகிஸ்தானிடம் கூறியுள்ளது.நான் மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டால் ஆப்கானிஸ்தான், ஈரான், சீனா, அமெரிக்கா உள்ளிட்ட பாகிஸ்தானின் அனைத்து அண்டை நாடுகளுடன் நல்லுறவை ஏற்படுத்த முயற்சி செய்வேன்.
உண்மையில் எங்களுக்கு அனைத்து நாடுகளுடனும் நல்லுறவு தேவை. மக்களை வறுமையில் இருந்து மீட்டெடுக்க சிறந்த வழி அனைவருடனும் நல்லுறவை வைத்து வர்த்தகம் செய்ய வேண்டும். இதன் மூலம் தான் மக்களுக்கு உதவ முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஹோர்முஸ் முடக்கத்திற்கு காரணமான ஈரான் தளபதி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தகவல்!
வியாழன் 26, மார்ச் 2026 5:00:28 PM (IST)

ஈரானின் அச்சுறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உறுதி
வியாழன் 26, மார்ச் 2026 10:29:35 AM (IST)

பாகிஸ்தானில் லஷ்கர் பயங்கரவாதி படுகொலை: சொந்தக் குடும்பத்தினரே தீர்த்துக்கட்டினர்?
திங்கள் 23, மார்ச் 2026 12:55:43 PM (IST)

வளைகுடாப் போரில் அதிரடி திருப்பம்: 4,000 கி.மீ. தூரம் பாயும் ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல்!
ஞாயிறு 22, மார்ச் 2026 9:47:13 AM (IST)

ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்கா பரிசீலனை: டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
சனி 21, மார்ச் 2026 4:23:35 PM (IST)

போர்க்காலச் சூழல் மத்தியில் ரமலான் பெருநாள்: அமைதி வேண்டி இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகை!
சனி 21, மார்ச் 2026 11:58:42 AM (IST)

