» செய்திகள் - விளையாட்டு » உலகம்
டுவிட்டரில் டிரம்புக்கு விதிக்கப்பட்ட நிரந்தர தடை நீக்கம்: எலான் மஸ்க் நடவடிக்கை
திங்கள் 21, நவம்பர் 2022 10:26:14 AM (IST)
டிரம்ப் தனது டுவிட்டர் கணக்கை பயன்படுத்த விதிக்கப்பட்டிருந்த தடையை எலான் மஸ்க் நீக்கினார். இதன் மூலம் டிரம்பின் டுவிட்டர் கணக்கு மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது.
அமெரிக்காவில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 6-ந் தேதி டிரம்பின் ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கானோர் நாடாளுமன்றத்துக்குள் புகுந்து பெரும் கலவரத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து டிரம்ப் தனது பதிவுகள் மூலம் வன்முறையை தூண்டியதாக கூறி பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூகவலைத்தள நிறுவனங்கள் அவரது கணக்கை முடக்கின. இதில் டுவிட்டர் நிறுவனம் டிரம்புக்கு நிரந்த தடை விதித்தது. இதனால் டிரம்ப் 'சோசியல் ட்ரூத்' என்கிற பெயரில் தனக்கென சொந்தமாக சமூகவலைத்தளத்தை உருவாக்கினார். இந்நிலையில் பெரும் தொகை கொடுத்து டுவிட்டர் நிறுவனத்தை வாங்கியுள்ள உலகப்பணக்காரர் எலான் மஸ்க், டுவிட்டரில் டிரம்புக்கு விதிக்கப்பட்ட நிரந்தர தடை திரும்பப்பெறுவது தொடர்பாக பரிசீலித்து வந்தார்.
அந்த வகையில் டிரம்ப் டுவிட்டரை மீண்டும் பயன்படுத்த அனுமதிக்கலாமா? வேண்டாமா? என எலான் மஸ்க் டுவிட்டரில் வாக்கெடுப்பு நடத்தினார். சுமார் 1½ கோடி பேர் இதில் பங்கேற்று வாக்களித்த நிலையில் 51.8 சதவீதம் பேர் டிரம்ப் டுவிட்டரை மீண்டும் பயன்படுத்த ஆதரவு தெரிவித்தனர். இதை தொடர்ந்து டிரம்ப் தனது டுவிட்டர் கணக்கை பயன்படுத்த விதிக்கப்பட்டிருந்த தடையை எலான் மஸ்க் நேற்று நீக்கினார். இதன் மூலம் டிரம்பின் டுவிட்டர் கணக்கு மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நேபாளத்தில் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து: தமிழக பக்தர்கள் 7 பேர் உயிரிழப்பு!
திங்கள் 16, மார்ச் 2026 8:12:24 AM (IST)

அமெரிக்கா, தென்கொரியா கூட்டு ராணுவப் பயிற்சி: பதிலடி கொடுத்த வடகொரியா!
ஞாயிறு 15, மார்ச் 2026 10:25:22 AM (IST)

ஈரான் உச்ச தலைவர் பற்றி தகவல் கொடுத்தால் 10 மில்லியன் டாலர் வெகுமதி: அமெரிக்கா அறிவிப்பு
சனி 14, மார்ச் 2026 12:45:28 PM (IST)

ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இந்தியக் கப்பல்கள் செல்ல ஈரான் அனுமதி: தூதரக ரீதியிலான வெற்றி
வியாழன் 12, மார்ச் 2026 12:40:43 PM (IST)

அமெரிக்காவுக்கு வடகொரியா பகிரங்க மிரட்டல்: ஏவுகணை சோதனையைப் பார்வையிட்டார் கிம்!
வியாழன் 12, மார்ச் 2026 8:35:09 AM (IST)

பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு: பள்ளிகளுக்கு 2 வாரம் விடுமுறை அறிவிப்பு!
செவ்வாய் 10, மார்ச் 2026 4:53:28 PM (IST)

