» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இந்தியாவில் மதரீதியான நிகழ்வுகள் கவலை அளிக்கின்றன : அமெரிக்கா கருத்து

சனி 2, ஜூலை 2022 12:17:18 PM (IST)

இந்தியாவில் மதரீதியாக நடைபெறும் நிகழ்வுகள் கவலை அளிப்பதாக சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க தூதர் ரஷாத் உசேன் தெரிவித்துள்ளார். 

சர்வதேச மத சுதந்திர மாநாட்டில் உரையாற்றிய அவர், இந்தியாவில் உள்ள ஏராளமான மத குழுக்கள் குறித்து அமெரிக்கா கவலை கொள்வதாக கூறியுள்ளார். இந்தியாவில் குடியிரிமைச் சட்டம், ஹிஜாப் தடை, வீடுகள் இடிப்பு என மன ரீதியாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக ரஷாத் உசேன் தெரிவித்துள்ளார். 

வங்கதேச இஸ்லாமியர்கள் குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பேச்சை சுட்டிக் காட்டிய அமைச்சர் ஒருவர், முஸ்லீம்களை கடுமையாக விமர்சித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் மனிதாபிமான செயல்கள் அதிகரிப்பது கவலை அளிப்பதாகவும், இது தொடர்பான சவால்கள் குறித்த நேரடியாக இந்திய அதிகாரிகளுடன் பேசியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

உலகில் உள்ள அனைத்து மதத்தினரின் சுதந்திரத்தை காப்பது அவசியம் என்று ரஷாத் உசேன் குறிப்பிட்டுள்ளார். உதய்பூரில் டெய்லர் கொல்லப்பட்டதற்கும் கண்டனம் தெரிவித்த அவர், இது போன்ற சம்பவங்களை ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறியுள்ளார். தனது தந்தை 1969ம் ஆண்டு அமெரிக்காவில் குடியேறினாலும் இன்றும் தானும் அவரும் தன் குடும்பமும் இந்தியாவை மிகவும் நேசிப்பதாக உசேன் தெரிவித்துள்ளார். இதனால் இந்தியாவில் அன்றாட நிகழ்வுகளை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் அதன் மதிப்புகள் காக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.   


மக்கள் கருத்து

JAIHINDJul 2, 2022 - 03:38:11 PM | Posted IP 162.1*****

நீ ஏன் இந்தியாவில் மூக்கை நுழைக்கிறாய்... உன் நாட்டை திருத்து.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory