» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இந்தியா உள்ளிட்ட 16 நாடுகளுக்கு செல்ல சவுதி அரேபிய மக்களுக்கு தடை : அரசு அதிரடி உத்தரவு

திங்கள் 23, மே 2022 5:13:35 PM (IST)

சவுதி அரேபிய மக்கள் இந்தியா உள்ளிட்ட 16 நாடுகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019-ஆம் ஆண்டு இறுதி முதல் உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பரவி வருகிறது. பெரும்பாலான நாடுகளில் தடுப்பூசி அறிமுகத்திற்கு வந்த பிறகு கரோனா கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது. இருப்பினும் ஒரு சில நாடுகளில் மட்டும் கரோனா தாக்கம் மீண்டும் அதிகரித்து வருகிறது. 

இந்நிலையில் சவுதி அரேபியாவில் தற்போது மீண்டும் கரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. தினசரி தொற்று விகிதம் கடந்த சில வாரங்களாக உயர்ந்து வர்கிறது. இதையடுத்து சவுதி அரேபிய மக்கள் இந்தியா உள்ளிட்ட 16 நாடுகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இந்தியா, லெபனான், சிரியா, துருக்கி, ஈரான், ஆப்கானிஸ்தான், யேமன், சோமாலியா, எத்தியோப்ப்யா, காங்கோ குடியரசு, லிபியா, இந்தோனேசியா, வியட்நாம், ஆர்மெனியா, பெலாரஸ், வெனிசுலா ஆகிய நாடுகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.அதே சமயம் இந்தியாவில் இருந்து சவுதி செல்லும் மக்களுக்கு எந்த கட்டுப்பாடுகளும் இதுவரை விதிக்கப்படவில்லை.

மேலும் உலக நாடுகளில் பரவி வரும் குரங்கம்மை வைரஸ் குறித்து கண்காணித்து வருவதாகவும் சவுதி அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்நாட்டு அரசு, ‘தற்போடு வரை குரங்கம்மை பரவல் மனிதர்களிடையே மிக குறைந்த அளவிலேயே இருக்கிறது. அதனால் பெருந்தொற்றாக பரவும் வாய்ப்பு குறைவு. இருப்பினும் அதன் நிலைமை குறித்து கண்காணித்து வருகிறோம்’ என கூறியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory