» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: டோங்கோ தீவுகளில் சுனாமி எச்சரிக்கை

சனி 15, ஜனவரி 2022 8:05:52 PM (IST)

இந்தோனேசியா தலைநகர் ஜகர்தாவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ரிக்டர் அளவுகோலில் 6.6-ஆகப் பதிவான் இந்த நிலநடுக்கம்  ஜகர்தாவிலிருந்து 110 கி.மீ. தொலைவில், 70 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டுள்ளது. இருப்பினும், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. மேலும், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

டோங்கோ தீவுகளில்...

தென் பசிபிக்கில் உள்ள டோங்கோ தீவுகளில் கடலுக்கடியில் எரிமலை வெடிப்பு காரணமாக, அந்த தீவுகளை சுனாமி தாக்க தொடங்கியுள்ளன. 2.5 அடிக்கு மேல் டோங்கா நாட்டில் ஆழிப்பேரலை தாக்கம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் சமோவா தீவிலும் 2 அடிக்கு மேல் ஆழிப்பேரலை தாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. டோங்கா தீவுகள் முழுவதுக்கும் தற்போது சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory