» செய்திகள் - விளையாட்டு » உலகம்

தடுப்பூசிக்கு எதிராக பிரச்சாரம் செய்த பிரான்ஸ் எம்.பி. கரோனா தொற்றால் மரணம்

ஞாயிறு 9, ஜனவரி 2022 7:45:22 PM (IST)



பிரான்ஸில் கரோனா தடுப்பூசிக்கு எதிராக பிரச்சாரம் செய்த நாடாளுமன்ற எம்.பி. ஒருவர் கரோனா தொற்றால் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

உலக அளவில் கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. உலக சுகாதார அமைப்பு 2021 டிசம்பர் 27-ம் தேதி முதல் 2022 ஜனவரி 2-ம் தேதி வரையிலான உலக அளவிலான கரோனா தொற்று குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கடந்த வாரத்தில் உலக அளவில் கரோனா பரவல் திடீரென 71 சதவீதம் அதிகரித்துள்ளது. அதேசமயம், உயிரிழப்பு 10 சதவீதம் குறைந்துள்ளது. கரோனா பரவலைத் தடுக்க உலக நாடுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

இந்நிலையில் பிரான்ஸில், கரோனாவுக்கு எதிராகத் தடுப்பூசி செயல்படுவது சந்தேகத்துக்குரியது என்று தடுப்பூசிக்கு எதிராகத் தொடர் பிரச்சாரங்களில் ஈடுபட்ட பிரான்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோஸ் எவ்ரார்டு.  வலசாரி கட்சியைச் சேர்ந்த இவர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அவருக்கு வயது 76. மறைந்த ஜோஸ் எவ்ரார்டு கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை. அவரது மறைவுக்கு பிரான்ஸ் அதிபர் மக்ரோன் இரங்கல் தெரிவித்துள்ளார். ஜோஸ் எவ்ரார்டு மறைவு, தடுப்பூசிக்கு எதிராக பிரான்ஸில் பிரச்சாரம் செய்தவர்களுக்கு பதிலாக அமைந்துள்ளதாக சமூக வலைதளங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory