» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஆப்கானுக்கு இந்தியா மனிதாபிமான உதவி: 2 டன் மருந்துகள் விமானம் மூலம் அனுப்பிவைப்பு!

சனி 8, ஜனவரி 2022 12:10:27 PM (IST)



ஆப்கானுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்கி வரும் இந்தியா, நேற்று 2 டன் அளவிலான உயிர்காக்கும் மருந்துகளை விமானம் மூலம் அனுப்பி வைத்தது.

ஆப்கானிஸ்தானை தலீபான் பயங்கரவாதிகள் கைப்பற்றி சுமார் 6 மாதங்கள் ஆகும் நிலையில், அங்கு மக்கள் வாழ்வதற்கான சூழல் தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. இது உலகின் மிக மோசமான மனிதாபிமான நெருக்கடிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இதன் காரணமாக இந்தியா, ஆப்கானிஸ்தானுக்கு தொடர்ந்து மனிதாபிமான உதவிகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் கடந்த மாதம் 1-ந்தேதி 1.6 டன் அளவிலான உயிர்காக்கும் மருந்துகளை விமானம் மூலம் ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பி வைத்தது. 

அதன் தொடர்ச்சியாக 5 லட்சம் கொரோனா தடுப்பூசிகளும் வழங்கப்பட்டது. இந்நிலையில் நேற்று 2 டன் அளவிலான உயிர்காக்கும் மருந்துகளை இந்தியா, ஆப்கானிஸ்தானிடம் வழங்கியது.  இது குறித்து மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், "ஆப்கானிஸ்தான் மக்களுக்கான நமது மனிதாபிமான உதவியின் ஒரு பகுதியாக, ஆப்கானிஸ்தானுக்கு 2 டன் அத்தியாவசிய உயிர்காக்கும் மருந்துகளை கொண்ட 3-வது தொகுதி மருத்துவ உதவியை இந்தியா இன்று வழங்கியது. அவை காபூலில் உள்ள இந்திரா காந்தி ஆஸ்பத்திரியில் ஒப்படைக்கப்பட்டன” என கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory