» செய்திகள் - விளையாட்டு » உலகம்
இனி வாரத்தில் 4½ நாள் மட்டுமே வேலை நாட்கள் : ஐக்கிய அரபு நாடுகள் அறிவிப்பு
செவ்வாய் 7, டிசம்பர் 2021 5:04:38 PM (IST)

ஜனவரி 1-ஆம் தேதி முதல் வாரத்திற்கு 4½ நாள் மட்டுமே வேலை நேரம் இருக்கும் என ஐக்கிய அரபு நாடுகள் கூட்டமைப்பு அறிவித்திருக்கிறது.
ஐக்கிய அரபு கூட்டமைப்பு நாடுகளான ரஸ் அல் கைமா, அபுதாபி, சார்ஜா, துபை, அஜ்மன், உம்-அல்-குவைன் மற்றும் புஜைராவில் வருகிற 2022, ஜனவரி 1ஆம் தேதி முதல் புதிய பணி நேரம் அறிமுகமாக இருக்கிறது. அதன்படி, திங்கள்கிழமை முதல் வியாழக்கிழமை வரை காலை 7.30 முதல் மாலை 3.30 வரை 8 மணி நேர பணியும் , வெள்ளிக்கிழமை காலை 7.30 முதல் மதியம் 12 வரை 4.30 மணி நேர பணியும் நடைமுறைக்கு வருகிறது. வெள்ளி மதியம் 1.15 மணிக்கு தொழுகை முடிந்ததிலிருந்து சனி , ஞாயிறு உள்பட 2.5 நாள்கள் விடுமுறை எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
உற்பத்தியை அதிகரித்தல் மற்றும் குடும்பத்தை கவனிக்கவும் இந்த புதிய பணி திட்டம் நடைமுறைக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால், ஐக்கிய அரபு நாடுகளில் பணிபுரியும் ஊழியர்கள் மகிழ்ச்சியடைந்திருக்கிறார்கள். தற்போது, அரபு நாடுகளில் வெள்ளிக்கிழமை மட்டுமே விடுமுறை என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உக்ரைனில் அணுமின் நிலையம் அருகே நீல நிற நாய்கள்: சமூக ஊடகங்களில் வைரல்!
புதன் 29, அக்டோபர் 2025 12:35:18 PM (IST)

வெளிநாட்டினர், கிரீன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு புதிய நடைமுறை : அமெரிக்கா அறிவிப்பு
செவ்வாய் 28, அக்டோபர் 2025 5:00:36 PM (IST)

பிரான்ஸ் அருங்காட்சியகத்தில் ரூ.898 கோடி பொருட்களை கொள்ளையடித்த 2 பேர் கைது
திங்கள் 27, அக்டோபர் 2025 8:58:03 AM (IST)

மத்திய கிழக்கில் அமைதி முயற்சிகளுக்கு முழு ஆதரவு : ஐ.நா. கூட்டத்தில் இந்தியா உறுதி
சனி 25, அக்டோபர் 2025 5:46:24 PM (IST)

ரஷியாவிடம் கச்சா எண்ணெய் கொள்முதலை இந்தியா குறைத்துள்ளது: அமெரிக்கா
வெள்ளி 24, அக்டோபர் 2025 12:47:53 PM (IST)

ரஷ்ய எண்ணெய் நிறுவனங்கள் மீது பொருளாதார தடை விதித்தது அமெரிக்கா
வியாழன் 23, அக்டோபர் 2025 4:21:51 PM (IST)


.gif)
MAKKALDec 8, 2021 - 03:30:02 PM | Posted IP 108.1*****