» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இங்கிலாந்தில் ஒமைக்ரான் வைரஸ் சமூக பரவலாக மாறிவிட்டது: சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்

செவ்வாய் 7, டிசம்பர் 2021 12:35:38 PM (IST)

இங்கிலாந்தில் ஒமைக்ரான் வைரஸ் பிராந்தியங்கள் முழுவதும் சமூக பரவலாக மாறியுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் சஜித் ஜாவித் தெரிவித்துள்ளார். 

உருமாறிய புதிய வகை கரோனாவான ஒமைக்ரான் வைரஸ் பெரும் அச்சுறுத்தலாக மாறி வருகிறது. அந்த வைரஸ் பல்வேறு நாடுகளில் பரவி உள்ளது. இங்கிலாந்து நாட்டிலும் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு இருக்கிறது. 

இந்நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் சஜித் ஜாவித் பாராளுமன்றத்தில் பேசும்போது, ‘ஒமைக்ரான் வைரஸ் இங்கிலாந்தின் பிராந்தியங்கள் முழுவதும் சமூக பரவலாக மாறியுள்ளது. இதில் சர்வதேச பயணத்துடன் தொடர்பில்லாத பாதிப்புகளும் உள்ளது. எனவே இங்கிலாந்தின் பல பகுதிகளில் தற்போது சமூக பரவல் என்பதை நாம் முடிவு செய்யலாம்’ என்று தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory