» செய்திகள் - விளையாட்டு » உலகம்
ஒமைக்ரான் வைரஸ் 23 நாடுகளுக்கு பரவியுள்ளது: உலக சுகாதார அமைப்பு தகவல்
வியாழன் 2, டிசம்பர் 2021 12:33:28 PM (IST)
ஒமைக்ரான் வைரஸ் தற்போது 23 நாடுகளில் பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுவரை கண்டறியப்பட்ட வைரஸ்களில் மிகவும் வேகமாகப் பரவும் தன்மை கொண்டதாகவும், தடுப்பூசியை அதிகமாக எதிர்க்கும் தன்மை கொண்டதாகவும் அறிகுறிகளும் தீவரத்தன்மை கொண்டதாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள்.
இந்நிலையில் உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ராஸ் அதானம் கெப்ரியாசிஸ் நேற்று ஜெனிவாவில் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸின் உருமாற்ற பிரிவான ஒமைக்ரான் வைரஸ் தற்போது 23 நாடுகளுக்கு பரவியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும்.
ஒமைக்ரானின் இந்த வளர்ச்சியை உலக சுகாதார அமைப்பு தொடர்ந்து கண்காணித்து வருகிறது, மிகத் தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளது. ஒவ்வொரு நாட்டையும் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. ஆனால், ஒமைக்ரானின் இந்த வளர்ச்சி எங்களுக்கு வியப்பாக இல்லை. வைரஸ்கள் என்ன செய்யுமோ அதைத்தான் செய்கிறது. நான் அனுமதிக்கும் வரை இந்த வைரஸ் தொடர்ந்து பரவிக்கொண்டேதான் இருக்கும்.
ஒமைக்ரான் குறித்து நிறைய அறிந்து வருகிறோம், இன்னும் அதன் பரவல் குறித்து அதிகமாக தெரிந்து கொள்ள வேண்டியதிருக்கிறது. அந்த நோயின் தீவிரம், பரிசோதனையின் முக்கியத்துவம், தடுப்பூசிகள், சிகிச்சை குறித்து அதிகமாக அறிந்து கொள்ள வேண்டியதுள்ளது
கடந்த இரு நாட்களாக உலக சுகாதார அமைப்பின் பல்வேறு ஆலோசனைக் குழுவின் வல்லுநர்கள் சேர்ந்து ஒமைக்ரான் வளர்ச்சி, அதன் வடிவங்கள் குறித்து ஆலோசனை நடத்தி மதிப்பீடு செய்தனர். பல்வேறு கேள்விகளுக்கு விடை கிடைக்க தொடர்ந்து ஆய்வுகள் தேவை எனத் தெரிவித்தனர். இவ்வாறு அதானம் தெரிவி்த்தார். ஒமைக்ரான் கண்டறியப்பட்டபின் தென் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வருவோருக்கு ஐரோப்பிய யூனியன் நாடுகள், பிரிட்டன், கனடா, அமெரி்க்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் தடை விதித்துள்ளன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அமெரிக்காவை புரட்டிப்போட்ட திடீர் வெள்ளம்: கோடை முகாமில் தங்கியிருந்த 25 சிறுமிகள் மாயம்
ஞாயிறு 6, ஜூலை 2025 11:15:35 AM (IST)

பல ஆயிரம் கோடி வங்கி கடன் மோசடி: நீரவ் மோடியின் சகோதரர் அமெரிக்காவில் கைது!
சனி 5, ஜூலை 2025 4:36:42 PM (IST)

இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு 500% வரி: அமெரிக்க நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல்!
வெள்ளி 4, ஜூலை 2025 11:55:30 AM (IST)

ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு 500% வரி: அமெரிக்கா முடிவுக்கு ஜெய்சங்கர் கருத்து!
வியாழன் 3, ஜூலை 2025 5:48:03 PM (IST)

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 6 மாத சிறை தண்டனை விதிப்பு!
புதன் 2, ஜூலை 2025 5:14:15 PM (IST)

பகல்காம் தாக்குதல் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: குவாட் அமைப்பு கூட்டறிக்கை
புதன் 2, ஜூலை 2025 10:56:21 AM (IST)
