» செய்திகள் - விளையாட்டு » உலகம்

அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் மருத்துவமனையில் அனுமதி

வெள்ளி 15, அக்டோபர் 2021 11:28:24 AM (IST)

அமெரிக்க முன்னாள் அதிபர் பில் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டனுக்கு திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் கலிபோர்னியாவில் உள்ள இர்வின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 75 வயதான அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து டாக்டர்கள் கண்காணித்து வருகிறார்கள். அவருக்கு ஏற்பட்ட பாதிப்பு முந்தைய இதய பிரச்சினை அல்லது கொரோனாவுடன் தொடர்புடையதல்ல என்றும் ரத்த தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து அவரது செய்தித் தொடர்பாளர் ஏஞ்சல் யூரேனா டுவிட்டர் பதிவல் "பில் கிளிண்டன் நல்ல மனநிலையில் இருக்கிறார். அவருக்கு சிறந்த கவனிப்பை வழங்கிய டாக்டர்கள், நர்சுகள் மற்றும் ஊழியர்களுக்கு நன்றி" என்று கூறி உள்ளார். டாக்டர்கள் அல்பேஷ் அமின், லிசா பார்டாக் கூறும்போது, "பில்கிளிண்டனுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை நல்ல பலனை அளித்துள்ளது. அவர் விரைவில் வீட்டுக்கு செல்வார் என்று நாங்கள் நம்புகிறோம்" என்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory