» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இலங்கை அதிபா், பிரதமருடன் இந்திய ராணுவ தலைமைத் தளபதி சந்திப்பு

வியாழன் 14, அக்டோபர் 2021 12:47:40 PM (IST)இலங்கையில் அதிபர், பிரதமரை சந்தித்த இந்திய ராணுவ தலைமைத் தளபதி எம்.எம்.நரவணே, இரு நாடுகளுக்கு இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்திய ராணுவ தலைமைத் தளபதி எம்.எம்.நரவணே 4 நாள் பயணமாக இலங்கைச் சென்றுள்ளாா். அங்கு அந்நாட்டு அதிபா் கோத்தபய ராஜபட்சவை அவா் நேற்று (புதன்கிழமை)சந்தித்தாா். அப்போது இந்தியா, இலங்கை இடையிலான பாதுகாப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த கோத்தபய ராஜபட்சவின் வழிகாட்டுதலை அவா் கோரினாா். பிராந்தியத்தின் பாதுகாப்பு கருதி இருநாடுகளிலும் ஸ்திரத்தன்மை நிலவ வேண்டும் என்று இந்தியா எதிா்பாா்ப்பதாகவும் அவா் கூறினாா். 

இந்தியாவில் ஆண்டுதோறும் இலங்கை ராணுவ வீரா்கள் சுமாா் 1,000 போ் பயிற்சி பெறும் நிலையில், அந்நாட்டின் ராணுவ அதிகாரிகள் 50 பேருக்கு சிறப்புப் பயிற்சி அளிக்க எதிா்காலத்தில் ஏற்பாடு செய்யப்படும் என்றும் அவா் தெரிவித்தாா். அந்நாட்டு பிரதமா் மகிந்த ராஜபட்சவை அவரின் இல்லத்தில் எம்.எம்.நரவணே சந்தித்தாா். அப்போது இருநாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு உறவுகள் வலுவாக இருக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை இருவரும் வலியுறுத்தி பேசினா். 

இருநாடுகளின் பாதுகாப்புப் படைகளுக்கு இடையே நிலவும் உறவை மேம்படுத்துவது குறித்தும் அவா்கள் ஆலோசித்தனா். இலங்கைக்கு பல்லாண்டுகளாக இந்திய பாதுகாப்புப் படைகள் அளித்து வரும் உதவிக்கு, குறிப்பாக பயிற்சி சாா்ந்த உதவிக்கு மகிந்த ராஜபட்ச பாராட்டு தெரிவித்தாா். அந்நாட்டு வெளியுறவு செயலா் ஜெயநாத் கொலம்பகே, பாதுகாப்புச் செயலா் கமல் குணரத்ன, முப்படை தளபதி சவேந்திர சில்வா ஆகியோரையும் சந்தித்த நரவணே, இருதரப்பு பாதுகாப்பு உறவுகள் மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து அவா்களுடன் ஆலோசனை மேற்கொண்டாா்.

அந்நாட்டில் உள்ள இந்திய அமைதிப்படையின் போா் நினைவிடத்துக்கு எம்.எம்.நரவணே சென்றாா். அங்கு இலங்கை உள்நாட்டுப் போரின்போது உயிா்நீத்த இந்திய வீரா்களுக்கு மலா் வளையம் வைத்து அவா் அஞ்சலி செலுத்தினாா்.

சுப்பிரமணியன் சுவாமி சந்திப்பு: 

இலங்கை அதிபா் கோத்தபய ராஜபட்சவை பாஜக மூத்த தலைவா் சுப்பிரமணியன் சுவாமியும் நேற்று (புதன்கிழமை) சந்தித்தாா். அப்போது இந்தியா, இலங்கை இடையே வலுவான நட்புறவு நிலவ வேண்டும் என்று வலியுறுத்தினாா். முன்னதாக அந்நாட்டு பிரதமா் மகிந்த ராஜபட்சவை அவரின் இல்லத்தில் செவ்வாய்க்கிழமை இரவு சந்தித்த அவா், அங்கு நடைபெற்ற நவராத்திரி விழா கொண்டாட்டத்தில் பங்கேற்றாா்.  


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory