» செய்திகள் - விளையாட்டு » உலகம்

நேபாளத்தில் ஆற்றில் பேருந்து கவிழ்ந்து விபத்து : உயிரிழப்பு 32-ஆக அதிகரிப்பு

புதன் 13, அக்டோபர் 2021 3:52:19 PM (IST)

நேபாளத்தில் ஆற்றில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் உயிரிழப்பு 32ஆக அதிகரித்துள்ளது. 6 பேர் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நேபாள நாட்டில் முகு மாவட்டத்தின் நேபாள்கஞ்ச் பகுதியிலிருந்து நேற்று(அக்-12) கம்கதி நகரை நோக்கி பயணிகளுடன் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக சயநாத்ராரா பகுதியைக் கடக்கும்போது பினா ஜ்யாரி ஆற்றில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

இவ்விபத்தில் பேருந்தில் பயணித்த 39 பேரில்  22பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயமுற்ற 16 பேர் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் இன்று சிகிச்சை பலனளிக்காததால் மேலும் 10 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இதனால் பலி எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளது.படுகாயம் அடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory