» செய்திகள் - விளையாட்டு » உலகம்
எனது ஆட்சி மீது இலங்கை மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளது: அதிபர் கோத்தபய வேதனை
திங்கள் 11, அக்டோபர் 2021 1:01:53 PM (IST)

எனது ஆட்சி மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளது என இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
இலங்கையின் 72-வது ராணுவ தினவிழா அனுராதபுரத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அதிபர் கோத்தபய ராஜபக்சே கலந்து கொண்டார். கொரோனா நோயை கட்டுப்படுத்த கடந்த 2 ஆண்டுகளாக நாம் போராடி வருகிறோம். இதனால் நாட்டை முடக்குதல், பல்வேறு தடைகள் போன்றவை ஏற்படுத்தப்பட்டன. இதன் காரணமாக பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்த பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டதற்காக நான் நியாயம் கூறப்போவது இல்லை.
ஆனாலும் இதை முறியடித்து வேலை வாய்ப்பு மற்றும் வளர்ச்சி திட்டங்களை முன்னெடுத்து செல்கிறோம். மக்கள் எதிர்பார்த்தது நிறைவேறவில்லை என்பதால் என் மீதும், இந்த ஆட்சி மீதும் மக்கள் வெறுப்பு அடைந்து இருப்பதை நான் உணர்கிறேன். அந்த வெறுப்பை நான் ஏற்றுக் கொள்கிறேன். ஆனாலும் நாட்டை புதிய உத்வேகத்துடன் அபிவிருத்தி பாதைக்கு கொண்டு செல்வோம். புதிய அரசியல் அமைப்பு, புதிய தேர்தல் முறை அடுத்த வருடத்துக்குள் உருவாக்கப்படும். ஒரே நாடு, ஒரே சட்டம் என்ற உறுதிமொழியும் நிறைவேற்றப்படும் என அதிபர் கோத்தபய ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆப்கானிஸ்தான் எல்லையில் பாகிஸ்தான் வான்வழி தாக்குதல்: 3 கிரிக்கெட் வீரர்கள் உள்பட 8 பேர் பலி
சனி 18, அக்டோபர் 2025 10:46:45 AM (IST)

ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதாக மோடி உறுதி கூறினார்: டிரம்ப் பேட்டி!
வியாழன் 16, அக்டோபர் 2025 3:31:02 PM (IST)

சீன அரசு அதிகாரிகளுடன் ரகசிய தொடர்பு : இந்திய வம்சாவளி ஆலோசகர் அமெரிக்காவில் கைது
புதன் 15, அக்டோபர் 2025 11:48:01 AM (IST)

மாஸ்கோ வரை பாயும் ஏவுகணைகளை உக்ரைனுக்கு வழங்குவேன்: ரஷியாவுக்கு டிரம்ப் மிரட்டல்!
செவ்வாய் 14, அக்டோபர் 2025 10:28:15 AM (IST)

2025ஆம் ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிப்பு
திங்கள் 13, அக்டோபர் 2025 5:21:39 PM (IST)

வர்த்தக போரை விரும்பவில்லை; அமெரிக்காவின் மிரட்டலுக்கு பயப்பட மாட்டோம் - சீனா உறுதி
திங்கள் 13, அக்டோபர் 2025 12:02:17 PM (IST)

adaminOct 12, 2021 - 03:55:44 PM | Posted IP 108.1*****