» செய்திகள் - விளையாட்டு » உலகம்
இந்தியப் பிரதமர் மோடி - அமெரிக்க அதிபர் பைடன் செப். 24ல் சந்திப்பு: வெள்ளை மாளிகை அறிவிப்பு
செவ்வாய் 21, செப்டம்பர் 2021 10:27:41 AM (IST)

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் பிரதமர் மோடி செப்டம்பர் 24ம் தேதி சந்திக்கவுள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்தது.
அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் செப்டம்பர் 24-ம் தேதி நடைபெறவுள்ள 'க்வாட்' அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இந்த வாரம் அமெரிக்க புறப்படுகிறார். இதில் பங்கேற்கச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் பைடன், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிஸனுடன் தனிப்பட்ட முறையில் பேச்சு நடத்துவார் என முன்பு தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில் வெள்ளை மாளிகை இதனை உறுதிபடுத்தியுள்ளது. இந்தியப் பிரதமர் மோடி மற்றும் ஜப்பான் பிரதமர் யோஷிஹிடே சுகா ஆகியோரை அமெரிக்க அதிபர் பைடன் சந்திக்கவுள்ளதாக வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சீன அரசு அதிகாரிகளுடன் ரகசிய தொடர்பு : இந்திய வம்சாவளி ஆலோசகர் அமெரிக்காவில் கைது
புதன் 15, அக்டோபர் 2025 11:48:01 AM (IST)

மாஸ்கோ வரை பாயும் ஏவுகணைகளை உக்ரைனுக்கு வழங்குவேன்: ரஷியாவுக்கு டிரம்ப் மிரட்டல்!
செவ்வாய் 14, அக்டோபர் 2025 10:28:15 AM (IST)

2025ஆம் ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிப்பு
திங்கள் 13, அக்டோபர் 2025 5:21:39 PM (IST)

வர்த்தக போரை விரும்பவில்லை; அமெரிக்காவின் மிரட்டலுக்கு பயப்பட மாட்டோம் - சீனா உறுதி
திங்கள் 13, அக்டோபர் 2025 12:02:17 PM (IST)

ராஜினாமா செய்த 4 நாட்களில் பிரான்ஸ் பிரதமராக செபாஸ்டியன் மீண்டும் நியமனம்
ஞாயிறு 12, அக்டோபர் 2025 11:24:27 AM (IST)

படைகள் வாபஸ் பெறப்பட்டன காசா போர்நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்தது
சனி 11, அக்டோபர் 2025 4:30:39 PM (IST)
