» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஆப்கானிஸ்தானில் கல்வி, வேலையில் சமஉரிமை கோரி தலிபான்களுக்கு எதிராக பெண்கள் போராட்டம்!

திங்கள் 20, செப்டம்பர் 2021 5:38:29 PM (IST)ஆப்கானிஸ்தானில் கல்வி மற்றும் வேலையில் சம உரிமை கோரி தலிபான்களுக்கு எதிராக பெண்கள் போராட்டம் நடத்தினர். 

ஆப்கனில் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள தலிபான்கள், கடந்த 20 ஆண்டுகளாக பெண்களுக்கு அளிக்கப்பட்டு வந்த உரிமைகளை பறித்து வருகின்றனர். குறிப்பாக பெண்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு கேள்விக்குறியாகி உள்ளது. இதையடுத்து, பெண்களுக்கும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சமஉரிமை கோரி அந்நாட்டு பெண்கள் காபூலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும், முந்தைய அரசின் மகளிர் விவகாரத் துறை அமைச்சகம் கடந்த செப்டம்பர் 17 ஆம் தேதி மூடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  பெண்களுக்கு உரிமைகளை வழங்கக்கோரி வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

அமைச்சகத்தை மூடுவது குறித்து, தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபியுல்லா முஜாஹித் கூறுகையில், ஷரியா சட்டத்தின் கீழ் பெண்களுக்கான சக்திவாய்ந்த, திறமையான நிர்வாகத்தை நிறுவ இருப்பதாகவும் ஆனால் அதற்கு ஒரு அமைச்சகம் தேவையில்லை என்றும் தெரிவித்தார். மேலும், முந்தைய அரசு, ஆப்கானியப் பெண்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்கு எதுவும் செய்யவில்லை, கிராமங்களில் உள்ள பெண்களுக்கு அடிப்படை உரிமைகள் எதுவும் வழங்கப்படவில்லை என்று முன்னதாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory