» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஆஸ்திரேலியாவுக்கு நீர் மூழ்கி கப்பல் வழங்க ஒப்பந்தம்: அமெரிக்காவுக்கு வடகொரியா எச்சரிக்கை

திங்கள் 20, செப்டம்பர் 2021 5:11:27 PM (IST)

ஆஸ்திரேலியாவுக்கு அணுசக்தி நீர் மூழ்கி கப்பல் வழங்க ஒப்பந்தம் செய்துள்ள அமெரிக்காவுக்கு வடகொரியா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் சீனாவை எதிர்க்கொள்ள ஆக்கஸ் என்ற புதிய பாதுகாப்பு கூட்டமைப்பை அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியா உருவாக்கியுள்ளது. இத்திட்டத்தின் படி ஆஸ்திரேலியாவின் படை பலத்தை அதிகரிப்போம் என்றும் அந்நாட்டுக்கு அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் கிடைக்க உதவுவோம் எனவும் பிரிட்டனும், அமெரிக்காவும் அறிவித்துள்ளன.

இந்த நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு அணுசக்தி நீர் மூழ்கி கப்பல் வழங்கும் அமெரிக்காவின் முடிவை வடகொரியா கடுமையாக எதிர்த்துள்ளது. ஆஸ்திரேலியா, அமெரிக்கா, பிரிட்டன் இடையேயான ஏற்பாடு மிகவும் ஆபத்தானது எனவும் ஆசிய பசுபிக் பகுதியில்  பாதுகாப்பு நிலையை கடுமையாக  பாதிக்கும் என்றும் வடகொரியாவின் வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரி தெரிவித்துள்ளார். 

இந்த ஒப்பந்தத்தை வடகொரியா உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும், இந்த ஒப்பந்தம் தங்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் இருக்குமேயானால் தக்க பதிலடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் எச்சரித்துள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory