» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஆப்கானில் முதுநிலை வரை பெண்கள் கல்வி பயிலலாம்: தலிபான்களின் புதிய கொள்கை முடிவு

திங்கள் 13, செப்டம்பர் 2021 10:32:15 AM (IST)

ஆப்கானிஸ்தானில் பெண்கள் முதுநிலை பட்டப்படிப்பு வரையிலும் கல்வி பயிலலாம் என தலிபான்களின் புதிய கொள்கை முடிவில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுக்குப் பிறகு ஆட்சியை பிடித்துள்ள தலிபான்கள் இடைக்கால அரசை அமைத்துள்ளனர். கடந்த 1996-2001 வரை தலிபான் ஆட்சியில் பெண்களுக்கு எதிராக கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பெண்கள் கல்வி கற்க அனுமதி மறுக்கப்பட்டது. பெண்கள் உரிமை நசுக்கப்பட்டது சர்வதேச அளவில் பரபரப்பானது. ஆனால், இம்முறை பெண்களுக்கு சம உரிமை அளிக்கப்படும் என தலிபான்கள் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில், தலிபான் அரசின் உயர் கல்வி அமைச்சரான அப்துல் பாகி ஹக்கானி, கல்வித் துறையில் தலிபான்களின் புதிய கொள்கை முடிவுகளை அறிவித்தார். அதில் அவர், ‘‘20 ஆண்டை பின்நோக்கி பார்க்க நாங்கள் விரும்பவில்லை. இன்று இருப்பதை கொண்டு புதிய தொடக்கத்தை துவங்கப் போகிறோம். ஆப்கானில் பெண்கள் முதுநிலை பட்டப்படிப்பு வரையிலும் பயிலலாம். 

ஆனால், பல்கலைக் கழகங்களில் இருபாலர் சேர்ந்து படிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. பெண்களுக்கான தனி கல்லூரியில் அவர்கள் பயிலலாம். அவர்களுக்கு நிச்சயம் ஆடை கட்டுப்பாடு உண்டு. புர்கா, ஹிஜாப் (தலை, கழுத்து, மார்பு பகுதியை மறைக்கும் ஆடை) கட்டாயம் அணிய வேண்டும். அதே சமயம், முகத்தை மூடுவது, ஸ்கார்ப் அணிவது அவரவர் விருப்பம்,’’ என்றார். அதே சமயம் தற்போதுள்ள பாடத்திட்டங்கள் மாற்றங்கள் வரும் என்பதை மட்டும் அமைச்சர் ஹக்கானி கூறி உள்ளார். தலிபான்கள் பெரும்பாலும் மத கல்வியையே போதிப்பார்கள் என தகவல்கள் கூறுகின்றன.

 இசைக் கலைஞர்கள், குத்துச்சண்டை வீராங்கனை ஓட்டம்

தலிபான்கள் ஆட்சியில் இசைக்கு ஒருபோதும் அனுமதி கிடையாது. சமீபத்தில் நாட்டுப்புற இசைக்கலைஞர் ஒருவரை தலிபான்கள் சுட்டுக் கொன்றனர். இந்நிலையில், ஆப்கானில் உள்ள இசைக் கலைஞர்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுக்கு தப்பி ஓடுகின்றனர். அது மட்டுமின்றி பாகிஸ்தானில் உள்ள ஆப்கான் இசைக்கலைஞர்கள் கூட தங்களின் கச்சேரிகளை ரத்து செய்துள்ளனர். இசைக்கருவி கடைகளை மூடி உள்ளனர். 

அதனால், எது வேண்டுமானாலும் செய்வார்கள். எனவே, இந்த கலையை விட்டே செல்கிறோம்,’ என்கின்றனர் ஆப்கான் இசைக் கலைஞர்கள். இதே போல், விளையாட்டு துறையிலும் பெண்களை தலிபான்கள் அனுமதிப்பதில்லை. சமீபத்தில் ஆப்கான் பெண்கள் கிரிக்கெட் அணிக்கு தடை விதித்த நிலையில், பெண் குத்துச் சண்டை வீராங்கனையான ஷீமா ரெசாயை கொன்று விடுவதாக மிரட்டி உள்ளனர். இதனால், குத்துச்சண்டை விளையாட்டுக்காக ஷீமா தனது குடும்பத்துடன் ஆப்கானில் இருந்து வெளியேற உள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory