» செய்திகள் - விளையாட்டு » உலகம்
ஆப்கானிஸ்தான் முன்னாள் துணை அதிபரின் சகோதரர் கொலை: தலீபான்கள் வெறியாட்டம்
சனி 11, செப்டம்பர் 2021 12:30:27 PM (IST)
ஆப்கானிஸ்தான் முன்னாள் துணை அதிபரின் சகோதரரை தாலிபான்கள் சித்ரவதை செய்து கொலை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கொலை
ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகள் ஆட்சியை கைப்பற்றி இருக்கும் நிலையில், அங்கு விரைவில் புதிய அரசை அமைப்பதற்கான நடவடிக்கைகளை அவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க தலீபான்களின் அரசை ஏற்காத முன்னாள் துணை அதிபர் அம்ருல்லா சலே, தன்னைத்தானே ஆப்கானிஸ்தானின் அதிபர் என பிரகடனப்படுத்தி உள்ளார்.அவரது சொந்த மாகாணமான பஞ்ச்ஷீரில் தலீபான்களுக்கும், எதிர்ப்பு படைகளுக்கும் இடையே தொடர்ந்து சண்டை நடந்து வருகிறது. இந்நிலையில் அம்ருல்லா சலேயின் மூத்த சகோதரரான ரோகுல்லா சலேயை தலீபான்கள் சிறைப்பிடித்துள்ளனர். பின்னர் அவரை சித்ரவதை செய்து கொலை செய்துள்ளதாக தகவல்கள் தெரிவித்து உள்ளன. அதேநேரம் அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவில்லை. 'அது அங்கேயே கிடந்து அழுக வேண்டும்' என தலிபான்கள் கூறியதாக அஸிசியின் உறவினர் தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சீனாவுடன் தைவான் இணைவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது: அதிபர் ஜின்பிங் உறுதி!
வெள்ளி 2, ஜனவரி 2026 10:16:45 AM (IST)

அமைதி ஒப்பந்தத்தின் அந்த 10 சதவீதம் உக்ரைன் தலைவிதியை தீர்மானிக்கும்: ஜெலன்ஸ்கி
வியாழன் 1, ஜனவரி 2026 11:44:49 AM (IST)

ஜிமெயில் முகவரியை மாற்றிக் கொள்ளும் வசதி அறிமுகம்: கூகுள் நிறுவனம் அறிவிப்பு
புதன் 31, டிசம்பர் 2025 3:29:53 PM (IST)

வங்கதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியா காலமானார்
செவ்வாய் 30, டிசம்பர் 2025 10:51:19 AM (IST)

உக்ரைன் - ரஷியா போரை முடிவுக்குக் கொண்டு வருவதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது: டிரம்ப்
திங்கள் 29, டிசம்பர் 2025 5:39:55 PM (IST)

தாய்லாந்து - கம்போடியா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம்: கூட்டு அறிக்கை வெளியீடு!
சனி 27, டிசம்பர் 2025 4:02:41 PM (IST)

