» செய்திகள் - விளையாட்டு » உலகம்
உலக அளவில் கரோனா உயிரிழப்பு 21 சதவீதம் அதிகரிப்பு: உலக சுகாதார அமைப்பு
வியாழன் 29, ஜூலை 2021 12:46:49 PM (IST)
உலக அளவில் கடந்த வாரம் கரோனா மரணங்கள் 21 சதவீதம் அதிகரித்து இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்தது.
இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட செய்திக்குறிப்பு : கடந்த வாரம் 69 ஆயிரம் கரோனா உயிரிழப்புகள் நடந்துள்ளன. இவற்றில் பெரும்பாலானவை அமெரிக்கா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ளன. கரோனா புதிய பாதிப்புகள், 8 சதவீதம் அதிகரித்துள்ளது.
உலகம் முழுவதும் மொத்த பாதிப்பு 19 கோடியே 56 லட்சத்தை தாண்டி விட்டது. இதேரீதியில் சென்றால், இன்னும் 2 வாரங்களில் 20 கோடியை மிஞ்சிவிடும். அமெரிக்கா, பிரேசில், இந்தோனேசியா, இங்கிலாந்து, இந்தியா ஆகிய நாடுகளில் புதிய பாதிப்பு அதிகமாக இருக்கிறது. இவ்வாறு கூறியுள்ளது.
adminJul 29, 2021 - 02:15:49 PM | Posted IP 162.1*****