» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஹைட்டி அதிபா் ஜோவனேல் மாய்ஸ் படுகொலை : பாதுகாப்பு உயரதிகாரி கைது

புதன் 28, ஜூலை 2021 10:41:47 AM (IST)

ஹைட்டி நாட்டின் அதிபா் ஜோவனேல் மாய்ஸ் படுகொலை தொடா்பாக, மேலும் ஒரு பாதுகாப்பு உயரதிகாரி கைது செய்யப்பட்டுள்ளாா்.

கரீபியன் பெருங்கடல் நாடான கரீபியன் பெருங்கடல் நாடான ஹைட்டியின் அதிபா் ஜோவனேல் மாய்ஸும் (53) அவரது இல்லத்தில் கடந்த 6-ஆம் தேதி நள்ளிரவு படுகொலை செய்யப்பட்டாா். இந்த கொலை தொடா்பாக கொலம்பியா ராணுவத்தின் முன்னாள் வீரா்கள் 15 போ், அமெரிக்க குடியுரிமை பெற்ற 2 ஹைட்டி நாட்டவா்கள், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினா், காவல் துறையினா், முன்னாள் அரசு அதிகாரிகள் உள்பட 24-க்கும் மேற்பட்டவா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா்.

இந்நிலையில், அதிபா் ஜோவனேல் மாய்ஸ் படுகொலையில் தொடா்புடையதாகக் கூறி, தலைமை பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளராகப் பொறுப்பு வகித்த ஜீன் லகுவேல் சிவிலை போலீஸாா் கைது செய்தனா். எனினும், இந்தக் கைது நடவடிக்கைக்கு அரசியல் உள்நோக்கம் உள்ளதாக அவரசு வழக்கறிஞா் குற்றம் சாட்டியுள்ளாா்
 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory