» செய்திகள் - விளையாட்டு » உலகம்

அமெரிக்காவில் 1.5 கோடி டோஸ் கரோனா தடுப்பூசிகள் வீணானது - அதிர்ச்சி தகவல்

வியாழன் 1, ஏப்ரல் 2021 3:41:56 PM (IST)

அமெரிக்காவில் ஜான்சன் அண்ட் ஜான்சன் தயாரித்த ஒற்றை-ஷாட் கரோனா வைரஸ் தடுப்பூசிகள் சுமார் 1.5 கோடி  டோஸ் வீணானதாக தகவல் வெளியாகி உள்ளது. 

2021-ஆம் ஆண்டின் இறுதிக்குள் 100 கோடிக்கும்  அதிகமான டோஸ்களை வழங்க ஜான்சன் & ஜான்சன் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், மருந்தில் கலப்படவேண்டிய ஒரு முக்கிய மூலப்பொருளின் அளவில் சற்று மாற்றம் ஏற்பட்டதால், 1.5 கோடி  டோஸ் மருந்தை தடை செய்து விட்டதாகவும் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

மேலும், உற்பத்தியை விரைவாக உயர்த்துவதற்கான நிறுவனத்தின் முயற்சிகளுக்கும், அமெரிக்காவின் தடுப்பூசி திட்டத்துக்கும் இது ஒரு பெரிய சரிவு என கூறப்படுகிறது. இந்த இழப்பை ஈடுகட்ட ஏப்ரல் மாதத்தில் கூடுதலாக 2.4 கோடி டோஸ்களை உற்பத்தி செய்யவுள்ளதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது. மாடர்னா மற்றும் பைசரின் தடுப்பூசிகளைப் போல், இதனை உறையவைக்கத் தேவையில்லை என்பதால் ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசி தடுப்பூசி பெரிதும் பாராட்டப்படுகிறது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory