» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஜெர்மனியில் பிப்.14 வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு : அதிபர் அங்கேலா மேர்க்கெல் அறிவிப்பு

புதன் 20, ஜனவரி 2021 5:20:53 PM (IST)

ஜெர்மனியில் கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக பிப்ரவரி 14 ஆம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்படுவதாக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கரோனா தொற்று பரவல் குறையாத காரணத்தால் பல்வேறு நாடுகளில் பொதுமுடக்கத்தில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக பிரிட்டன் நாடுகளில் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசி போடும் பணியும் வேகமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் புதியவகை கரோனா வேகமாகப் பரவி வருவதால் ஜெர்மனியில் மீண்டும் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நாட்டு மக்களிடையே பேசிய அதிபர் அங்கேலா மேர்க்கெல், அச்சுறுத்தும் வகையில் கரோனா தொற்று பரவி வருவதால் பொதுமுடக்கத்தை நீட்டிக்க வேண்டியது அவசியம் எனத் தெரிவித்தார்.

முன்னதாக 16 மாகாண ஆளுநர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்ட மேர்க்கெல் பிரிட்டனில் இருந்து பரவிய புதிய வகை கரோனா தொற்று ஜெர்மனியில் பரவியுள்ளதைத் தொடர்ந்து பொதுமுடக்க கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படுவதாகத் தெரிவித்தார். ஜெர்மனியில் இதுவரை 47,622 பேர் கரோனா தொற்றால் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory