» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ரஷ்யாவின் ஸ்புட்னிக்-5 கரோனா தடுப்பு ஊசி மருந்தை இந்தியாவில் பரிசோதிக்க அனுமதி

ஞாயிறு 18, அக்டோபர் 2020 8:38:33 PM (IST)

ரஷ்யாவில் கண்டுபிடிக்கப்பட்ட ஸ்புட்னிக்-5 கரோனா தடுப்பூசி மருந்தை இந்தியாவின் மருத்துவ பரிசோதனை செய்ய டாக்டர் ரெட்டி லேப் நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ரெட்டி லேப் நிறுவனத்தில் மேனேஜிங் டைரக்டர் ஜிவி பிரசாத் இந்தத் தகவலை தெரிவித்தார். இந்தியாவில் சோதனைகள் நடத்த தேவையான நிதியை ரஷ்யாவில் சாவரின் ஃபண்ட் மற்றும் ரஷியன் டைரக்ட் இன்வெஸ்ட்மெண்ட் பண்டு ஆகிய இரண்டும் ரெட்டி லேப் நிறுவனத்துக்கு வழங்கும்.ஸ்புடனிக்-5 தடுப்பூசி மருந்து இந்தியாவில் வினியோகம் செய்வதற்கான உரிமையையும் ரெட்டி லேப் நிறுவனம்  பெறும்.10 கோடி ஸ்புடனிக்-5 தடுப்பூசி மருந்து குப்பிகளை ரெட்டி லேப்புக்கு ரஷ்யா வழங்கும்.ரசியா நேரடி முதலீட்டு நிதியின் தலைமை நிர்வாக அதிகாரி கிரில் டிமிட்ரிவ் தனது அறிக்கையில் இந்த விபரங்களை தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory