» செய்திகள் - விளையாட்டு » உலகம்

கரோனா பிரச்னைகளிலிருந்து உலகம் வெளிவர 2ம் தலைமுறை தடுப்பூசி தேவை: பில்கேட்ஸ்

வியாழன் 15, அக்டோபர் 2020 5:41:46 PM (IST)

"கரோனா வைரஸ் பிரச்னைகளிலிருந்து உலகம் வெளிவர, முதல் தலைமுறை தடுப்பூசிகள் மட்டும் போதாது,” என, மைக்ரோசாப்ட் அதிபர் பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார். 

"செம்மையான செயல்திறன் கொண்ட இரண்டாம் தலைமுறை தடுப்பூசிகள் வந்து, அவையும் பரவலாக போடப்பட்டால் தான் அது முடியும்,” என்கிறார் அவர். கரோனா தடுப்பூசி ஆராய்ச்சிக்காக பல கோடிகளை கொட்டி வரும் மெலிண்டா மற்றும் பில் கேட்ஸ் அறக்கட்டளையை நடத்தி வருபவர் கேட்ஸ்.

சில வாரங்களுக்கு முன், 2021 இறுதிக்குள், பணக்கார நாடுகளில் உள்ளோர் தடுப்பூசி போட்டு கரோனாவிலிருந்து தப்பிப்பர் என்று கேட்ஸ் கணித்திருந்தார். பின், வசதி குறைவான நாட்டிலுள்ளோர் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள, 2022ம் ஆண்டு இறுதி வரை ஆகும் என்று கூறியிருந்தார் கேட்ஸ். தற்போது அவரே இப்படி, தடுப்பூசி பற்றி தெரிவித்திருப்பது, பலரை கவலை கொள்ளச் செய்து உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory