» செய்திகள் - விளையாட்டு » உலகம்

சீனாவில் புதிதாக 6பேருக்கு தொற்று உறுதி: கரோனா 2வது அலையை தடுக்க பணிகள் தீவிரம்!!

திங்கள் 12, அக்டோபர் 2020 5:23:02 PM (IST)

சீனாவில் புதிதாக 6பேருக்கு கரோனா உறுதி செய்ய்பபட்டுள்ள நிலையில், வைரசின் 2-வது அலை ஏற்பட்டு விடாமல், தடுக்க அந்நாடு முழு வீச்சில்  செயல்பட்டு வருகிறது.  

உலக நாடுகளை தற்போது உலுக்கி வரும் கரோனா வைரஸ் முதன் முதலில் சீனாவின் உகான் நகரில் தான் வெளிப்பட்டது. வைரஸ் தொற்று பரவியதும் வேகமாக செயல்பட்டு, உகான் நகரம் அமைந்துள்ள ஹூபெய் மாகாணம் முழுவதையும் முடக்கியது. இதன் காரணமாக வெளி மாகாணங்களுக்கு தொற்று பரவுவது கணிசமாக மட்டுப்படுத்தப்பட்டது.  

சீன சுகாதாரத்துறை அளித்த தகவலின் படி அந்த நாட்டில் இதுவரை 85,578- பேருக்கு மட்டுமே தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது, கரோனா வைரசின் 2-வது அலை ஏற்பட்டு விடாமல், தடுக்க அந்நாடு முழு வீச்சில்  செயல்பட்டு வருகிறது.  கடந்த ஜூன் மாதம் பெய்ஜிங் நகர் முழுவதும் மிகப்பெரிய சோதனை நடத்தப்பட்டது.  இந்த நிலையில், சீனாவின்  துறைமுக நகரமான கிங்டாவோ நகரில் 6 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து,  , 5 நாட்களுக்குள் அந்த நகரத்தில் உள்ள சுமார் 94 லட்சம் பேருக்கும் பரிசோதனை செய்ய சீன அரசு திட்டமிட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory