» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இந்தியா,அமெரிக்காவை தொடர்ந்து பாகிஸ்தானிலும் டிக்டாக் செயலிக்கு தடை!

சனி 10, அக்டோபர் 2020 8:56:17 AM (IST)

இந்தியா,அமெரிக்காவை தொடர்ந்து பாகிஸ்தானும், டிக்டாக் செயலியை பயன்படுத்த தடை விதித்துள்ளது.

ஒழுக்கக்கேடான மற்றும் அநாகரீகமான வீடியோக்கள் பகிரப்படுவதாக எழுந்த புகார்களை தொடர்ந்து, சீன செயலியான டிக்டாக்கிற்கு பாகிஸ்தான் தடை விதித்துள்ளது. சட்டவிரோத ஆன்லைன் பதிவுகளை உடனடியாக நீக்குவதற்கான வழிமுறைகளை, முழுமையாக பின்பற்ற டிக்டாக் நிர்வாகம் தவறிவிட்டதாக பாகிஸ்தான் தொலைத்தொடர்பு ஆணையம் தெரிவித்துள்ளது. இந்தியா, அமெரிக்காவை தொடர்ந்து, சீனாவின் நேச நாடான பாகிஸ்தானும் டிக்டாக் செயலிக்கு தடை விதித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory