» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஒரு நாள் பிரதமராக பொறுப்பு வகித்த 16 வயது சிறுமி : பின்லாந்து நாட்டில் பரபரப்பு

வெள்ளி 9, அக்டோபர் 2020 8:29:29 AM (IST)



பின்லாந்து நாட்டில் 16 வயது சிறுமியை ‘ஒரு நாள்’ பிரதமர் ஆக்கியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

தமிழில் முதல்வன் என்ற படத்தை ஷங்கர் இயக்கி, அர்ஜுன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஒரு பத்திரிகையாளராக இருக்கும் ஒருவர் ஒரு நாள் தமிழக முதல்வராகிறார் என்பது படத்தின் கதை. இந்த படம் பின்னர் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டது. இப்போது முத்தல்வன் படத்தின் கதை உண்மையாகி வருகிறது. ஆனால் தமிழ்நாட்டிலோ, இந்தியாவிலோ அல்ல. இந்த அதிர்ச்சியூட்டும் செய்தி இப்போது பின்லாந்திலிருந்து வெளிவருகிறது.

ஐரோப்பிய நாடான பின்லாந்தில் சன்னா மரின் (34) என்ற பெண் தலைவர் பிரதமர் பதவி வகிக்கிறார். இங்கு அவர் ஆண், பெண் பாலின இடைவெளியை முடிவுக்கு கொண்டு வரும் போராட்டத்தை கையில் எடுத்துள்ளார். அந்த வகையில் அவர் ஒருபடி மேலே போய் 16 வயது சிறுமியான ஆவா முர்டோ என்பவரை நேற்று முன்தினம் ‘ஒரு நாள்’ பிரதமர் ஆக்கி, பிரதமர் நாற்காலியில் உட்கார வைத்து அழகு பார்த்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

ஆவா முர்டோவுக்கு சட்டம் இயற்றும் அதிகாரம் வழங்கப்படாதபோதும், அவர் அந்த ஒரு நாளில் தொழில்நுட்பத்தில் பெண்களின் உரிமைகளை முன்னிலைப்படுத்த பல்வேறு அரசியல்வாதிகளை சந்தித்தார். சர்வதேச பெண் குழந்தைகள் தினம், 11-ந்தேதி கொண்டாடப்படுவதையொட்டி, ஆவா முர்டோ ஒரு நாள் பிரதமர் பதவியை வகித்துள்ளார்.

சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தையொட்டி, பிளான் இன்டர்நேஷனல் அமைப்பு பெண் குழந்தைகளுக்கு அதிகாரம் என்ற திட்டத்தின்கீழ், உலகம் முழுவதும் ஒரு நாள் அரசியல் மற்றும் பிற துறைகளின் தலைமைப்பதவிக்கு பெண் குழந்தைகள் வருவதற்கு அனுமதித்துள்ளது. அந்த வகையில் பின்லாந்தில் 4-வது ஆண்டாக இது பின்பற்றப்பட்டுள்ளது. இதையொட்டி பிரதமர் சன்னா மரின் பேசுகையில், தொழில்நுட்பங்கள் அனைவருக்கும் அணுகக்கூடியதாக இறுப்பதை உறுதி செய்வதின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். அத்துடன், அவை நாடுகளுக்கு இடையே அல்லது சமூகங்களுக்குள் டிஜிட்டல் பிளவுகளை ஆழப்படுத்தக்கூடாது எனவும் கேட்டுக்கொண்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory