» செய்திகள் - விளையாட்டு » உலகம்

உலகத்திற்கு பேரழிவை ஏற்படுத்திய சீனா அதற்கு அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும் : டிரம்ப்

வியாழன் 8, அக்டோபர் 2020 4:50:54 PM (IST)

உலகத்திற்கு பேரழிவை ஏற்படுத்திய சீனா அதற்கு அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் கரோனாவால் பாதிக்கப்பட்டு ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். சிகிச்சைக்கு பிறகு குணமடைந்த அவர் வெள்ளை மாளிகைக்கு திரும்பினார். புதன்கிழமை தனது அலுவலகத்திற்கு சென்று வழக்கமான பணிகளை மேற்கொள்ளத் தொடங்கி உள்ளார்.

இந்நிலையில், டிரம்ப் வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில், ‘எனக்கு கரோனா வந்தது கடவுள் தந்த வரமாகவே கருதுகிறேன். கரோனாவுக்கு மருந்து கண்டுபிடிப்பதன் அவசியத்தை கற்றுகொடுத்திருக்கிறது’ என கூறி உள்ளார்.மேலும், சீனாவால் உருவாக்கப்பட்டு அமெரிக்கா மற்றும் உலகத்திற்கு பேரழிவை ஏற்படுத்திய சீனா அதற்கு அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்றும் டிரம்ப் எச்சரித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory