» செய்திகள் - விளையாட்டு » உலகம்

கரோனா தடுப்பூசி தயாராவதற்கு முன் 20 லட்சம் மக்கள் உயிரிழக்க நேரிடும் : உலக சுகாதார நிறுவனம்

சனி 26, செப்டம்பர் 2020 5:39:48 PM (IST)

கரோனா தடுப்பூசி தயாராவதற்கு முன் உலக அளவில் 20 லட்சம் மக்கள் உயிரிழக்க வாய்ப்புள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அதிர்ச்சித் தகவலைத் தெரிவித்துள்ளது.

உலகின் பல்வேறு நாடுகளில் தினந்தோறும் கரோனா பாதிப்பு அதிகரித்தவண்ணம் உள்ளது. இதுவரை உலகம் முழுவதும் 9 லட்சத்து 94 ஆயிரத்து 16 பேர் கரோனாவால் பலியாகி உள்ளனர். உலக முழுவதும் பல்வேறு நாடுகள் கரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளன. ரஷியாவில் கடந்த மாதம் கரோனாவிற்கு தடுப்பூசி தயாரித்து விட்டதாக அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் அறிவித்திருந்தார். அமெரிக்காவும் தடுப்பூசி தயாரிப்பில் தீவிரம் காட்டி வருகிறது.

இந்நிலையில் நேற்று சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவாவில் நடைபெற்றக் கூட்டத்தில் பேசிய உலக சுகாதார நிறுவனத்தின் அவசரகால திட்டத்தின் நிர்வாக இயக்குனர் மைக் ரியான் கரோனா தடுப்பூசியைப் பெறுவதற்கான சாதகமான சூழலை பார்க்கும்போது தடுப்பூசி தயாராவதற்கு முன்பே 20 லட்சம் மக்கள் கரோனாவால் பலியாகக்கூடிய வாய்ப்பு இருப்பதாகத் தெரிவித்தார். மேலும் உலகத் தலைவர்கள் உயிர்காக்கும் நடவடிக்கையில் சிறப்பாக செயல்படுவதின் மூலம் மட்டுமே இந்த நெருக்கடியில் இருந்து மீள முடியும் எனக் குறிப்பிட்டார்.


மக்கள் கருத்து

kumarSep 26, 2020 - 07:49:11 PM | Posted IP 173.2*****

உன் வாயில நல்ல வார்த்தையே வராதாடா மூதேவி...வூ வூ

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory