» செய்திகள் - விளையாட்டு » உலகம்

நான் அதிபரானால் எச்1பி விசா குறித்த இந்தியர்களின் கவலை நீங்கும்: ஜோ பைடன் உறுதி

வியாழன் 24, செப்டம்பர் 2020 10:32:04 AM (IST)

அமெரிக்காவில் "நான் அதிபரானால் எச்1பி விசா குறித்த இந்தியர்களின் கவலை நீங்கும் என ஜோ பைடன் தெரிவித்தார்.

அமெரிக்காவில் நவம்பர் மாதம் நடக்க இருக்கும் அதிபர் தேர்தலுக்காக குடியரசு கட்சி வேட்பாளரான தற்போதைய அதிபர் டிரம்பும், ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடனும் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக அமெரிக்காவில் உள்ள இந்திய வம்சாவளியினரின் வாக்குகளை கவருவதற்கு இருவருமே தீவிரம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் இந்திய வம்சாவளியினர் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இணையவழி நிதி திரட்டும் நிகழ்ச்சியில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், இந்திய வம்சாவளியினர் தங்களின் கடின உழைப்பாலும், தொழில் முயற்சிகளாலும் அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பங்கு அளித்துள்ளதாக ஜோ பைடன் புகழாரம் சூட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர், நடக்க இருக்கும் அதிபர் தேர்தலில் தான் வெற்றி பெற்று பதவிக்கு வந்தால் ‘எச்1பி’ விசா மட்டும் சட்டபூர்வ குடியேற்றம் குறித்த இந்தியர்களின் கவலைகள் போக்கப்படும் என உறுதியளித்தார். இந்திய வம்சாவளியினரின் கலாசார, சமூக மற்றும் குடும்ப மதிப்புகள் மிகவும் பாராட்டுக்குரியவை என்று குறிப்பிட்ட அவர், அதனாலேயே இந்திய அமெரிக்க புலம்பெயர்ந்தோரை தான் மிகவும் மதிப்பதாக தெரிவித்தார். மேலும் உலகின் மிகவும் செல்வாக்கான பன்னாட்டு நிறுவனங்களின் தலைமை பொறுப்புகளை இந்திய சமூகம் அலங்கரிப்பதற்காக அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory