» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஏப்ரல் மாதத்திற்குள் அமெரிக்கர்களுக்கு கரோனா தடுப்பூசி கிடைத்து விடும்: டிரம்ப் நம்பிக்கை

சனி 19, செப்டம்பர் 2020 11:00:12 AM (IST)

ஏப்ரல் மாதத்திற்குள் அமெரிக்கர்கள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி கிடைத்து விடும் என்று டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பூசிகள் கண்டுபிடிக்கும் பணி மும்முரமாக நடைபேற்று வருகிறது. உலக அளவில் கிட்டதட்ட 30 தடுப்பூசிகள் மருத்துவ பரிசோதனைகளில் உள்ளன. இந்த சூழலில்,  அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடக்க  உள்ளது. எனவே, அதற்குள் தடுப்பூசியை பயன்பாட்டுக்கு கொண்டு வந்து விட வேண்டும் என்று டிரம்ப் ஆர்வம் காட்டி வருகிறார்.  இந்த நிலையில், வாஷிங்டனில் செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப் அப்போது கூறியதாவது:- 

"ஒவ்வொரு மாதத்திலும் நூற்றுக்கணக்கான தடுப்பூசிகள் கிடைக்கும் . தேசிய மருந்துக் கட்டுப்பாட்டாளர்கள் அங்கீகரித்த 24 மணி நேரத்திலேயே கரோனா தடுப்பு மருந்துகளின் விநியோகம் தொடங்கி விடும். அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் கரோனா தடுப்பூசி அமெரிக்கர்களுக்கு போதிய அளவு கிடைத்து விடும் என எதிர்பார்க்கிறேன்.  நாம் குறுகிய காலத்திலேயே தகுந்த தடுப்பு மருந்தினை பெற்று கரோனாவை வென்று விடுவோம். அக்டோபர் மாதத்தில் கரோனா தடுப்பூசி மருந்திற்கான அனுமதி கிடைத்து விடும் என எதிர்பார்க்கிறேன்” என்று தெரிவித்தார்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory