» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ரஷ்யா கரோனா தடுப்பூசியால் பக்க விளைவுகள்: சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்!!

வெள்ளி 18, செப்டம்பர் 2020 5:23:27 PM (IST)

ஆக்ஸ்போர்ட் தடுப்பூசியைத் தொடர்ந்து தற்போது ரஷ்யா தயாரித்த கரோனா தடுப்பூசியான ஸ்புட்னிக் வி செலுத்தப்பட்ட 7ல் ஒருவருக்குப் பக்க விளைவுகள் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டுச் சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் கரோனா வைரஸ் வேகமாகப் பரவிவரும் நிலையில், தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாக இறங்கியுள்ளனர். இந்நிலையில் வைரஸ் தொற்றுக்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாக உலகில் முதல் நாடாக ரஷ்யா அறிவித்தது. தங்கள் நாட்டில் முன்கள பணியாளர்களுக்குத் தடுப்பூசி செலுத்த ஆரம்பித்து விட்டதாகக் கடந்த மாதம் தெரிவித்தது. இரண்டு கட்ட பரிசோதனைகள் மட்டுமே முடிவடைந்த நிலையில் மூன்றாம் கட்ட பரிசோதனை நடத்தாமல் இந்த தடுப்பூசியைப் பயன்படுத்த இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் மறுப்பு தெரிவித்துவிட்டன.
 
இந்த சூழலில் ரஷ்யாவின் நேரடி முதலீட்டு நிதியம், ஸ்புட்னிக் வி தடுப்பூசி மருந்தின் 100 மில்லியன் டோஸை இந்தியாவின் மருந்து நிறுவனமான டாக்டர் ரெட்டிஸ் ஆய்வகங்களுக்கு வழங்க ஒப்புக்கொண்டுள்ளதாகத் தெரிவித்தது. அதோடு, இந்தியாவில் 300 மில்லியன் டோஸ் மருந்தைத் தயாரிக்கவும் இம்மருந்தின் மூன்றாம் கட்ட பரிசோதனையை இந்தியாவில் மேற்கொள்ள இருப்பதாகவும் தெரிவித்தது. ஆனால் பரிசோதனை மேற்கொள்ள இன்னும் ரெட்டிஸ் ஆய்வகங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளிக்கவில்லை.

ரஷ்யாவின் இந்த அறிவிப்பு வெளியான நிலையில் ஸ்புட்னிக் வி மருந்து செலுத்தப்பட்ட 7 பேரில் ஒருவருக்குப் பக்க விளைவுகள் ஏற்பட்டதாக அந்நாட்டு சுகாதாரத் துறை அமைச்சர் மிகைல் முராஸ்கோ தெரிவித்ததாக அந்நாட்டு அரசு நடத்தும் டாஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 40,000 தன்னார்வலர்கள் இந்த தடுப்பூசியைச் செலுத்தி கொண்டதாகவும், இவர்களில் ஏறத்தாழ 14 சதவிகிதம் பேருக்கு தசை வலி மற்றும் உடல் வெப்பநிலை அதிகரிப்பது போன்ற பக்க விளைவுகள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே உலக சுகாதார அமைப்பு ரஷ்ய மருந்தின் பாதுகாப்பு தரவுகள் எதுவும் எங்களிடம் இல்லை என்று தெரிவித்திருந்த நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. முன்னதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் இணை இயக்குநர் ஜெனரல் டாக்டர் பல்ராம் பார்க்கவா, ரஷ்ய மருந்தின் தரவுகளை ஒரு உயர் மட்ட குழு பரிசீலித்து வருவதாகத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory