» செய்திகள் - விளையாட்டு » உலகம்

கலிபோர்னியா மாகாணத்தில் காட்டுத் தீ பாதிப்பு : கமலா ஹாரிஸ் ஆய்வு

புதன் 16, செப்டம்பர் 2020 12:14:30 PM (IST)



காட்டுத் தீயால் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில், துணை அதிபர் தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஸ் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

அமெரிக்காவில் காட்டுத் தீ பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆகஸ்ட் மத்தியில் தொடங்கிய இந்த காட்டுத் தீயில் சிக்கி கலிபோர்னியாவில் 25 பேரும், வாஷிங்டனில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். இதுவரை 3 மாகாணங்களில் ஆறாயிரத்து 200 வீடுகள் மற்றும் நிறுவனங்கள் தீயில் முற்றிலும் சேதம் அடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் காட்டுத் தீயின் வீரியம் குறித்து அறியாத அதிபர் பதவியில் உள்ளதாக டிரம்பை, ஜோ பிடன் கடுமையாக சாடியிருந்த நிலையில், அதிபர் டிரம்பை விமர்சிப்பது மக்களை பிரிக்கும் செயலோ, தத்துவமோ அல்ல என்றும், நாம் அனைவரும் இணைந்து இதற்கு தீர்வுக்காண முன்வர வேண்டும் என கமலா ஹாரிஸ் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory