» செய்திகள் - விளையாட்டு » உலகம்

கரோனாவுக்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிணைந்து போராட வேண்டும் : உலக சுகாதார அமைப்பு

ஞாயிறு 9, ஆகஸ்ட் 2020 1:09:38 PM (IST)

கரோனாவில் இருந்து விரைவாக விடுபட வேண்டும் என்றால், அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கரோனா வைரஸ் நோய்க்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. உலகின் பல்வேறு நாடுகள் கரோனாவிற்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இது குறித்து ஸ்விட்சா்லாந்தின் ஜெனீவா நகரில் அமைந்துள்ள அந்த அமைப்பின் தலைமையகத்தில், காணொலி காட்சி மூலம் அதன் தலைவா் டெட்ரோஸ் அதனோம் கூறியதாவது;-

"கரோனா தடுப்பு மருந்து விவகாரத்தில் தேசியவாதத்தைக் காட்டுவது மிகவும் தவறானதாகும். அத்தகைய சுயநலத்தால் யாருக்கும் நன்மை ஏற்படாது. கரோனா நோய்த்தொற்றின் பிடியிலிருந்து உலகம் விரைவாக விடுபட வேண்டும் என்றால், அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து போராட வேண்டும். காரணம், இது உலகமய காலக்கட்டம். தற்போதெல்லாம் அனைத்து நாடுகளின் பொருளாதாரமும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்துள்ளது.

இத்தகைய சூழலில், உலகின் மற்ற நாடுகளில் கரோனா நோய்த்தொற்று பரவிக் கொண்டிருந்தாலும், தங்கள் நாட்டுக்கு மட்டும் கரோனாவிலிருந்து பாதுகாப்பு பெற்றுவிடலாம் என்று நினைப்பது மிகவும் தவறு” என்று அவா் கூறியுள்ளார். 


மக்கள் கருத்து

kumarAug 12, 2020 - 11:38:01 AM | Posted IP 122.1*****

WHO vikum. China virkum ethiraka than porata vendum

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory