» செய்திகள் - விளையாட்டு » உலகம்

கேரளாவில் ஏர் இந்தியா விமானம் விபத்து; பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் வருத்தம்

சனி 8, ஆகஸ்ட் 2020 12:15:36 PM (IST)

கேரளாவில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளான துயர சம்பவத்திற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் வருத்தம் தெரிவித்துள்ளார்.

துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோட்டிற்கு 191 பயணிகளுடன் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்தது. அப்போது மழை பெய்து கொண்டிருந்தது. இதனால் விமானம் தரை இறங்கும்போது விபத்து ஏற்பட்டது. வெள்ளிக்கிழமை இரவு 7:38 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டது.மழை காரணமாக விமானம் ஓடுபாதையில் இருந்து சறுக்கியபடி விலகிச் சென்று மோதியது. இதில் முன்பக்கம் விபத்துக்குள்ளாகி நொறுங்கியது. 

இந்த விபத்தில் இரு விமானிகள் உட்பட 17 பேர் பலியாகினர். 100-க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர்.இந்த நிலையில் இந்த விமான விபத்திற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் வருத்தம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இம்ரான்கான் தனது ட்விட்டர் பக்கத்தில், "கேரளாவில் ஏர் இந்தியா விமான விபத்தில் உயிர்கள் பலியானதைத் கேள்விப்பட்டு வருத்தம் அடைந்தேன். இறைவன் இந்தக் கடுமையான சூழலில் அந்தக் குடும்பத்தினருக்கு வலிமையை அளிக்க வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory