» செய்திகள் - விளையாட்டு » உலகம்

கரோனா வைரஸை ஒழிப்பது சாத்தியமில்லை - அமெரிக்காவின் தொற்று நோய் நிபுணர் சொல்கிறார்

வியாழன் 6, ஆகஸ்ட் 2020 4:46:43 PM (IST)

கரோனா வைரஸை கிரகத்திலிருந்து ஒழிக்க முடியாது என்று அமெரிக்காவின் முன்னணி தொற்று நோய் நிபுணர் டாக்டர் அந்தோணி பவுசி தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் முன்னணி தொற்று நோய் நிபுணர் டாக்டர் அந்தோணி பவுசி  கூறியதாவது: கரோனா வைரஸை ஒழிக்க உலகத்தால் முடியாது. தடுப்பூசி தொற்று நோயைக் கட்டுக்குள் கொண்டுவர உதவும்.  நாம் இந்த கரோனா வைரஸை கிரகத்திலிருந்து ஒழிக்க முடியாது. ஏனென்றால் இது மிகவும் பயங்கரமாக பரவக்கூடிய வைரஸ், அதனால் ஒழிப்பது சாத்தியமில்லை என்று தோன்றுகிறது.

ஆனால் ஒரு நல்ல தடுப்பூசி மற்றும் பொது சுகாதார நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவதன் மூலம் நாம் கரோனாவை ஒழிக்க முடியும் என்று நினைக்கிறேன்.அடுத்த வருடத்திற்கு பிறகு கரோனா வைரஸ் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்படும்  2021 ஆண்டில் கரோனா கட்டுப்பாட்டில் இருக்கும் என்று நான் நம்புகிறேன், என்று அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory