» செய்திகள் - விளையாட்டு » உலகம்

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் பயங்கர வெடிவிபத்து: 73 பேர் பலி ; ‍‍4000 பேர் படுகாயம்!

புதன் 5, ஆகஸ்ட் 2020 11:05:58 AM (IST)



லெபனான் பெய்ரூட் துறைமுக பகுதியில் பயங்கர சத்தத்துடன் வெடிவிபத்து ஏற்பட்டதில், 70க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். சுமார் 4000 பேர் படுகாயமடைந்துள்ளனர். அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.

லெபனான் நாட்டின் தலைநகர் பெய்ரூட் துறைமுக பகுதியில் இந்திய நேரப்படி இரவு 9.30 மணியளவில் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடிவிபத்து ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் உள்ள வீடுகள் குலுங்கின. இடிபாடுக்குள் மக்கள் சிக்கியுள்ளது போன்ற படங்கள் வெளியாகியுள்ளன. அதேபோல் மக்கள் ரத்தம் சிந்தியபடி ஓடிய காட்சிகளும் வெளியாகியுள்ளன. 

இந்த வெடிவிபத்து பெய்ரூட் நகரையே உருகுலைய செய்துள்ளது. வெடிவிபத்து நடந்த சிலவினாடிகளில் ஆரஞ்சு நிறத்தில் புகைமண்டலமாக பெய்ரூட் துறைமுகப்பகுதி மாறியது.பெய்ரூட் மட்டுமல்லாமல் அந்நகரில் இருந்து 200 கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள தீவுகளிலும் இந்த வெடிவிபத்தின் தாக்கம் உணரப்பட்டது. இந்த வெடிவிபத்தில் தற்போதுவரை 73 பேர் உயிரிழந்துள்ளனர். 3 ஆயிரத்து 700 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.



இந்நிலையில், துறைமுகத்தில் உள்ள சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டிருந்த மிகவும் ஆபத்து நிறைந்த வெடிக்கக்கூடிய அமோனியம் நைட்ரேட் வேதிப்பொருளால் தான் இந்த கோரவிபத்து நடைபெற்றுள்ளதாக லெபனான் பிரதமர் ஹசன் டியப் தெரிவித்துள்ளார்.

விபத்து நடந்த துறைமுகம்
இந்த விபத்து குறித்து பிரதமர் கூறுகையில், எந்தவித பாதுகாப்பு நடைமுறைகளும் பின்பற்றப்படாமல் மக்களுக்கு ஆபத்து தரக்கூடிய வகையில் பெய்ரூட் துறைமுகத்தில் உள்ள சேமிப்பு கிடங்கில் 6 ஆண்டுகளாக 2 ஆயிரத்து 750 ரன் அமோனியம் நைட்ரேட் வேதிப்பொருள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இதனால் தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. இந்த கொடூர விபத்துக்கு காரணமானவர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு உச்சபட்ச தண்டனையை கொடுக்கும் வரை நான் ஓயப்போவதில்லை என்றார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory