» செய்திகள் - விளையாட்டு » உலகம்

சமூக ஊடக இணையதளங்களுக்கு கட்டுப்படுத்தும் சட்டப்பூர்வ ஆணையில் கையெழுத்திட்டார் டிரம்ப்!

வெள்ளி 29, மே 2020 11:54:16 AM (IST)

சமூக ஊடக இணையதளங்களுக்கு இருக்கும் சில சட்டப்பூர்வ பாதுகாப்புகளை நீக்க வகை செய்யும் செயலாக்க ஆணையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். 

சமூக ஊடக நிறுவனங்களை கட்டுப்படுத்தும் வகையில் டிரம்ப் கையெழுத்திட்ட செயலாக்க ஆணை சட்டரீதியிலான சவால்களை எதிர்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்  தவறான தகவல்களை டுவிட்டரில் பதிவு செய்ததை டுவிட்டர் நிறுவனம் அம்பலப்படுத்தியது. இதற்கு பதிலடி கொடுத்த டிரம்ப், தங்கள் குரல்களை சமூக ஊடகங்கள் முடக்கப் பார்ப்பதாக கூறி எச்சரிக்கை விடுத்தார்.
 
இந்நிலையில், சமூக ஊடக இணையதளங்களுக்கு இருக்கும் சில சட்டப்பூர்வ பாதுகாப்புகளை நீக்க வகை செய்யும் செயலாக்க ஆணையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களது தளங்களில் பதியப்படும் உள்ளடக்கங்களை மேற்பார்வை செய்யும் விதத்திற்காக அவற்றின் மீது சட்டரீதியிலான நடவடிக்கையை அரசு எடுப்பதற்கு இது வழிவகை செய்கிறது.

அதேசமயம் இந்த செயலாக்க ஆணை சட்டரீதியிலான சவால்களை எதிர்கொள்ளும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சமூக ஊடக இணையத்தளங்களுக்கான பாதுகாப்புகள் குறித்த தற்போதைய சட்டரீதியிலான புரிதலை மாற்றும் பணியில் அமெரிக்க நாடாளுமன்றம் அல்லது நீதி அமைப்புகள் ஈடுபட வேண்டும் என்று சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory