» செய்திகள் - விளையாட்டு » உலகம்

கரோனா வைரஸ் தடுப்பூசி மக்களை சென்றடைய 2½ வருடங்கள் ஆகும் : உலக சுகாதார அமைப்பு

வியாழன் 14, மே 2020 10:56:03 AM (IST)

கரோனா வைரஸ் தடுப்பூசி உலக மக்களை சென்றடைய 2½ வருடங்கள் ஆகும் என உலக சுகாதார அமைப்பின் சிறப்பு பிரதிநிதி டேவிட் நபரோ தெரிவித்துள்ளார்.

லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரியில், உலக சுகாதார பேராசிரியராகவும் பணியாற்றி வரும் டேவிட் நபரோ கூறியதாவது: பாதுகாப்பான மற்றும் நன்கு பலன் தரக்கூடிய தடுப்பூசியை உருவாக்கக் குறைந்தது 18 மாதங்கள் ஆகும் என கணிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அதை அதிகளவில் உற்பத்தி செய்து, 780 கோடி உலக மக்களுக்கு கொண்டு செல்ல மேலும் ஒரு வருடம் ஆகும்.

சில கிருமிகளுக்கான பாதுகாப்பான தடுப்பூசி பல வருடங்களாகியும் உருவாக்க முடியவில்லை என்பதை மக்கள் நினைவில் கொள்ள வேண்டும். கரோனா குறித்த எச்சரிக்கையை முன்பே ஏன் தெரிவிக்கவில்லை என உலக மக்கள் தங்கள் நாட்டு அரசையும், உலக சுகாதார நிறுவனத்தையும் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஸ்பெயின், இத்தாலி, இங்கிலாந்து மற்றும் அமெரிக்க மக்கள் நாம் இன்னும் விரைவாக செயல்பட்டுருக்க முடியாதா என கேட்கின்றனர்.

முன்பே முடிவுகளை எடுத்திருந்தால் நல்ல பலன் கிடைத்திருக்கும் என இப்போது நாங்கள் உணர்ந்திருக்கிறோம். இந்தியாவில் முதல் தொற்று கண்டறியப்பட்டபோதே, ஊரடங்கை அறிவித்திருந்தால், லட்சக்கணக்கான மக்கள் உடனடியாக பாதிக்கப்பட்டிருப்பார்கள். கரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் உயர்ந்து வரும் நிலையில், அதில் 50 முதல் 70 சதவீதம் பேருக்கு கரோனா அறிகுறியே இல்லை என அரசு தரவுகள் கூறுகின்றன. வலுவான நோய் எதிர்ப்புச் சக்தி இருக்கும் நபருக்கு, கரோனா அறிகுறியே தெரியாது.ஆனால், அவரால் மற்றவர்களுக்கு நோய் பரவும் என நிபுணர்கள் நம்புகின்றனர் என தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory