» செய்திகள் - விளையாட்டு » உலகம்

கரோனா கட்டுக்குள் வந்த பிறகே, கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் : உலக சுகாதார அமைப்பு

செவ்வாய் 7, ஏப்ரல் 2020 12:29:41 PM (IST)



கரோனா கட்டுக்குள் வந்த பிறகே, கட்டுப்பாடுகளை தளர்த்தும் நடவடிக்கையை உலக நாடுகள் பின்பற்ற வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.

கரோனாவைக் கட்டுப்படுத்த பல நாடுகள் ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை பிறப்பித்திருக்கும் நிலையில், படிப்படியாகக் கட்டுப்பாடுகளை தளர்த்தும் நடவடிக்கையை பின்பற்றுமாறு உலக சுகாதார அமைப்பு சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. மருத்துவர் மைக் ரையான் இது பற்றி கூறுகையில், பல்வேறு நாடுகள் பள்ளி, தொழில், பொது விழாக்கள், பொதுவிடங்களில் மக்கள் கூடுதல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்குக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

எனவே, ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளுக்கான அவகாசம் முடிந்ததும், ஒரே நேரத்தில் தளர்த்துவது என்பது ஒரு தவறான யோசனையாக இருக்கும். கரோனாவைக் கட்டுப்படுத்தும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, கட்டுக்குள் வந்த பிறகே, கட்டுப்பாடுகளை தளர்த்தும் நடவடிக்கையை உலக நாடுகள் பின்பற்ற வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.

இந்த ஊரடங்கு உள்ளிட்டக் கட்டுப்பாடுகள் நோய் பரவுவதைக் கட்டுப்படுத்தி வருகிறது. ஒரு வேளை கட்டுப்பாடுகளை தளர்த்திவிட்டால், நோய் பரவுவதைக் கட்டுப்படுத்த மாற்று ஏற்பாடுகளை முன்கூட்டியே செய்ய வேண்டியது மிகவும் அவசியம். எனவே, கரோனா பாதித்தவர்களைக் கண்டறிந்து, அவர்களுடன் தொடர்பில் இருந்த அனைவரையும் கண்டறிந்து, தனிமைப்படுத்தி, பெரிய அளவில் சோதனைகளை நடத்தி, சிகிச்சை அளிக்க வேண்டியது தற்போது மிக முக்கியப் பணியாகும் என்றும் ரையான் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory