» செய்திகள் - விளையாட்டு » உலகம்

அமெரிக்காவில் புலிக்கு கரோனா வைரஸ் பாதிப்பு: பூங்கா ஊழியர் மூலம் பரவியது

திங்கள் 6, ஏப்ரல் 2020 5:44:55 PM (IST)

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள வன உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் புலிக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

உலகம் முழுவதையும் கரோனா வைரஸ் ஆட்டி படைத்து வருகிறது. வல்லரசு நாடான அமெரிக்காவில் தான் கரோனா தற்போது அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் சுமார்  3,36,673 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. உலகம் முழுவதும் 1,272,860- பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 69,424- பேர் கொரோன பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். மனித சமூகத்தை மிரட்டி வரும் கரோனா வைரஸ், விலங்குகளைப் பாதிக்காது என்று பரவலாக பேசப்பட்டு வந்தன.  

ஆனால், இந்தக்கூற்றைப் பொய்யாக்கும் வகையில், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்துள்ள புரேன்ஸ் உயிரியல் பூங்காவில் பரமாரிக்கப்பட்டு வரும் பெண் புலி ஒன்றுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உயிரியல் பூங்காவில் பணியாற்றி வந்த நபர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதியானது. எனவே, அந்த நபர் மூலமாக புலிக்கு கரோனா தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. மேலும், சில புலிகளுக்கு வறட்டு இருமல் போன்ற அறிகுறிகள் தென்படுவதாக உயிரியல் பூங்கா நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது. புலிகள் மற்றும் சிங்கங்களிடம் வைரஸ் எவ்வாறு இருக்கும் என்று தெரியவில்லை. எனினும், பூங்காவில் உள்ள அனைத்து விலங்குகளையும் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம் என்று பூங்கா நிர்வாகம் கூறியுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory