» செய்திகள் - விளையாட்டு » உலகம்

கரோனா வைரஸ் தொற்று: பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் மருத்துவமனையில் அனுமதி

திங்கள் 6, ஏப்ரல் 2020 12:28:27 PM (IST)

கரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளான பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சீனாவில் உருவாகி உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ்,  ஐரோப்பிய நாடுகளில் கடும் தாக்கத்தை  ஏற்படுத்தி வருகிறது. பிரிட்டனிலும் கரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.  இந்த நோயினால்  சுமார் 48 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏறத்தாழ 6 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். கரோனா வைரஸ் தொற்று பிரிட்டனின் பெரும் தலைவர்களையும் தாக்கியது.  இளவரசர் சார்லஸ் வைரஸ் தொற்றுக்கு ஆளானார். சிகிச்சைக்கு பிறகு தற்போது குணம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்பின்னர் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கும் (55) கரோனா வைரஸ் தாக்கி இருப்பது கண்டறியப்பட்டது. உடனடியாக அவர் பிரதமர் அதிகாரப்பூர்வ இல்லத்தில் தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொண்டார். 10 நாட்களுக்கு பின்னர் மீண்டும் அவருக்கு நோயின் அறிகுறி தென்பட்டதால் அவர், கூடுதல் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கரோனா வைரசுடன் போராடி வரும் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் விரைவில் குணமடைய வேண்டும் என அமெரிக்கா சார்பில் அதிபர் டிரம்ப் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory