» செய்திகள் - விளையாட்டு » உலகம்

கரோனா வைரஸை அழிக்க நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்து ஆஸ்திரேலியாவில் கண்டுபிடிப்பு

சனி 4, ஏப்ரல் 2020 11:04:52 AM (IST)

உலகம் முழுவதும் கிடைக்கும் நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்தினால் கரோனா வைரஸை அழிக்க முடியும் என ஆஸ்திரேலியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் அமைந்துள்ள மோனாஷ் பல்கலைக்கழகத்தின் தலைமையிலான ஆய்வில், ஐவர்மெக்டின் என்ற மருந்தின் ஒரு டோஸ் உயிரணு கலாசாரத்தில் வளரும் சார்ஸ்- கோவ் 2 வைரஸை அழிக்க கூடும் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மோனாஷ் பயோமெடிசின் டிஸ்கவரி நிறுவனத்தின் கெய்லி வாக்ஸ்டாப் கூறியதாவயது: இந்த மருந்தின் ஒரு டோஸ் அனைத்து வைரஸின் அனைத்து மரபணு பொருட்களையும் முழுமையாக (ரிபோநியூக்ளிக் அமிலம்) 48 மணிநேரத்திற்குள் அகற்ற முடியும் என்பதையும், 24 மணி நேரத்தில் கூட அதில் குறிப்பிடத்தக்க அளவு குறைவடைவதனையும் நாங்கள் கண்டறிந்தோம் 

வைரஸில் ஐவர்மெக்டின் மருந்து எவ்வாறு செயல்படுகிறது என்பது தெரியவில்லை என்றாலும், இந்த மருந்து வைரஸை அழிப்பதற்காக உயிரணு திறனைக் குறைக்கும். நாங்கள் ஒரு உலகளாவிய தொற்றுநோயை எதிர் கொண்டிருக்கிறோம். இதற்கு அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சை இல்லை. இவ்வாறான காலங்களில், உலகெங்கிலும் ஏற்கனவே கிடைத்த ஒரு மருந்து கலவை எங்களிடம் இருந்தால், அது விரைவில் மக்களுக்கு உதவக்கூடும். தடுப்பூசி பரவலாகக் கிடைப்பதற்கு முன்னதாகவே இந்த மருந்து உதவியாக இருக்கும் என்று நம்புகின்றோம்” என அவர் தெரிவித்துள்ளார்.

இதைதொடர்ந்து அடுத்த கட்டமாக இந்த மருந்து மனிதர்களுக்கு கொடுக்க தகுந்த சரியான அளவை கண்டுபிடிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். மனிதர்களின் உடலுக்கு எந்த அளவு மருத்து பாதுகாப்பான ஆராயப்பட்டு வருகின்றது. ஐவர்மெக்டின் என்பது உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒட்டுண்ணி எதிர்ப்பு மருந்தாகும்.இது எச்.ஐ.வி தொற்று, டெங்கு மற்றும் இன்ப்ளூயன்ஸா உள்ளிட்ட வைரஸ்களுக்கு எதிராக பயனுள்ளதாக இருக்கிறது என கூறப்படுகின்றது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory