» செய்திகள் - விளையாட்டு » உலகம்

உலகம் முழுவதும் கரோனா வைரஸால் 18,887 பேர் உயிரிழப்பு: 4,22,566 பேர் பாதிப்பு

புதன் 25, மார்ச் 2020 6:08:56 PM (IST)

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தைக் கடந்துள்ளது. கரோனா வைரஸ் பாதித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18,000மாக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் மேலும் 5 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

சீனாவின் வூஹான் நகரில் கண்டறியப்பட்ட கோவிட்-19 என்ற வைரஸ் உலகம் முழுவதும் பரவி மிகப்பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. சீனாவில் இதுவரை 81,218 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,281 பேர் உயிரிழந்துள்ளனர். இத்தாலியில் கடந்த 2 நாட்களாக கரோனா வைரஸால் உயிரிழப்பு குறைந்திருந்த நிலையில் நேற்று மீண்டும் ஒரே நாளில் 743 பேர் உயிரிழந்தனர். இதனால் இறப்பு எண்ணிக்கை 6,820ஆக அதிகரித்துள்ளது.  69,176 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது

அமெரிக்காவில் இதுவரை இல்லாத அளவாக நேற்று ஒரே நாளில் 11,074 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.  அமெரிக்காவில் கடந்த 3 நாட்களில் மட்டும் 30,000 பேர் கரோனா பாதிப்பிற்கு உள்ளான நிலையி்ல் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 54, 808 ஆகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 775 ஆகவும் அதிகரித்துள்ளது. ஸ்பெயினில் நேற்று ஒரே நாளில் 680 பேர் உயிரிழந்தனர். இதனால் இறப்பு எண்ணிக்கை 2991 ஆக உயர்ந்துள்ளது. 42,058 பேர் கரோனா  வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஈரானில் 24, 811 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 1,934 பேர் உயிரிழந்துள்ளனர்.ஃபிரான்ஸில் 22,304 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 1,100 பேர் உயிரிழந்துள்ளனர். இதேபோல் பல்வேறு நாடுகளிலும் கரோனாவுக்கு புதிதாக சுமார் 1,500 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக மலேசியாவில் 172 பேரும், தென்கொரியாவில் 155 பேரும், கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது பரிசோதனையில் உறுதியாகியுள்ளது. இவர்களையும் சேர்த்து, இதுவரை உலகில் கரோனா வைரஸ் பாதித்தோரின் எண்ணிக்கை 4 லட்சத்து 22 ஆயிரத்தை தாண்டியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory