» செய்திகள் - விளையாட்டு » உலகம்

கரோனா அச்சுறுத்தல்: டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ஒரு வருடம் தள்ளிவைப்பு!!

புதன் 25, மார்ச் 2020 11:41:34 AM (IST)கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ஒருவருடம் தள்ளி வைக்கப்படுவதாக ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் தாமஸ் பாக் தெரிவித்துள்ளார்

ஜப்பானின் டோக்கியோ நகரில் வரும் ஜூலை 24-ம் தேதி முதல் ஆகஸ்ட் 9-ம் தேதி வரை ஒலிம்பிக் போட்டிகளை நடத்த சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி திட்டமிட்டிருந்தது. இதற்கிடையே உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பரவி வருவதால் ஒலிம்பிக் போட்டிகளை தள்ளிவைக்க வேண்டும் என அமெரிக்கா, பிரான்ஸ், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வந்தன. மேலும் பல்வேறு நாட்டு விளையாட்டு நட்சத்திரங்களும் போட்டியை தள்ளி வைக்க வேண்டும் என அழுத்தம் கொடுக்கத் தொடங்கினர்.

இதற்கிடையே கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக சூழ்நிலை மேலும் மோசமானால் வீரர்களின் உடல் நலன் கருதி ஒலிம்பிக் போட்டியை தள்ளிவைக்கும் முடிவை எடுப்பது தவிர்க்க முடியாததாகிவிடும் எனஜப்பான் நாட்டு பிரதமர் ஷின் சோ அபே நேற்று முன்தினம் தெரிவித்தார். இந்நிலையில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, "ஒலிம்பிக் போட்டிகளை ஒருவருடம் தள்ளிவைக்க வேண்டும் என சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிக்கு, நான் பரிந்துரை செய்தேன். அதை 100 சதவீதம் ஏற்றுக்கெள்வதாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் தாமஸ் பாக் தெரிவித்துள்ளார்” என்றார்.

இந்த முடிவால் டோக்கியோ நகரம் பெரிய அளவிலான பாதிப்பை சந்திக்கக்கூடும் என கருதப்படுகிறது. ஒலிம்பிக் போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் அந்நகரம் குறிப்பிட்ட காலத்துக்குள் சிறப்பாக செய்து முடித்திருந்தது. மேலும் பெருவாரியான டிக்கெட்களையும் விற்று தீர்த்திருந்தது. புறக்கணிப்புகள், தீவிரவாததாக்குதல்கள், போராட்டங்கள் ஆகியவற்றை சந்தித்த அனுபவங்களை கொண்டிருந்தாலும் 1948-ம்ஆண்டில் இருந்து 4 வருடங்களுக்கு ஒருமுறை ஒலிம்பிக் போட்டி தடையின்றி நடத்தப்பட்டு வந்துள்ளது. உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவாக வர்ணிக்கப்படும் ஒலிம்பிக் போட்டி தற்போது முதன்முறையாக கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory