» செய்திகள் - விளையாட்டு » உலகம்

கரோனா பாதிப்பை கட்டுப்படுத்த 3 வாரங்களுக்கு பிரிட்டன் முடக்கம்: பிரதமர் அறிவிப்பு

செவ்வாய் 24, மார்ச் 2020 10:30:52 AM (IST)கரோனா பாதிப்பை கட்டுப்படுத்த 3 வாரங்களுக்கு பிரிட்டன் முடக்கப்படுவதாகவும், பல்வேறு கட்டுப்பாடுகளையும் பிரதமர்  போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.

சீனாவின் உகான் நகரில் வெளிப்பட்ட கரோனா வைரஸ், இத்தாலியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அமெரிக்கா, பிரிட்டன் போன்ற வல்லரசு நாடுகளும் கரோனா வைரஸ் பாதிப்புக்குத் தப்பவில்லை. பிரிட்டனில் நாளுக்கு நாள் கரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வருகிறது. தற்போது வரை கரோனா தொற்றுக்கு 330-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

இந்நிலையில், கரோனா பாதிப்பை கட்டுப்படுத்த பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்.  நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலமாக உரையாற்றிய போரிஸ் ஜான்சன்,  3 வாரங்கள் பிரிட்டன் முடக்கப்படுவதாகத் தெரிவித்தார். மேலும், உணவு, மருந்து ஆகிய அத்தியாவசியப் பொருட்களை வாங்க மட்டுமே வீடுகளை விட்டு வெளியே வர அனுமதிக்கப்படுவர் என்று தெரிவித்துள்ளார். பொது இடங்களில் இரண்டு நபர்களுக்கு மேல் கூடுவது தடை செய்யப்படுவதாகவும், அரசின் கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory