» செய்திகள் - விளையாட்டு » உலகம்

மூவாயிரம் ஆண்டுகள் பழமையான மம்மிக்கு செயற்கை குரல்வளை: ஆய்வாளர்கள் முயற்சி

வெள்ளி 24, ஜனவரி 2020 12:12:57 PM (IST)மூவாயிரம் ஆண்டுகள் பழமையான எகிப்திய மம்மியின் குரல்வளையை செயற்கையாக உருவாக்கி, அதற்கு குரல் கொடுக்கும் முயற்சியில் ஆய்வாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

சுமார் மூவாயிரிம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மதகுருவின் மம்மி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. பல வேதங்கள், மந்திரங்களை ஓதி அவரது குரல் மிகவும் வலிமையானதாக இருக்கும் என்பதால், அவரது குரல்வளையை 3டி தொழில்நுட்பத்தின் மூலம் அளவு எடுத்து, செயற்கைக் குரல் வளையை உருவாக்கியுள்ளனர். இந்த ஆய்வுப் பணியில் ஈடுபட்டிருக்கும் விஞ்ஞானிகளில் ஒருவரான டேவிட் ஹோவர்ட் இதுபற்றி கூறுகையில், இந்த குரல்வளை மூலம் சில வார்த்தைகளை ஒலிக்க வைத்து, அவரது குரல் வளம் எப்படி இருந்திருக்கும் என்று கண்டறியும் சோதனை நடைபெற்று வருகிறது என்கிறார்.

முதல் முறையாக, ஒரு மம்மிக்கு இந்த தொழில்நுட்பம் மூலம் குரலை உருவாக்கும் முயற்சி நடக்கிறது. அதாவது, இந்த மதகுருவின் தொண்டைப் பகுதியில் இன்னமும் மென்மையான திசுக்களும், தொண்டைப் பகுதியும் இருப்பதால்தான் இந்த முயற்சியை மேற்கொள்ள முடிகிறது, வெறும் எலும்புக்கூடாக இருந்தால் இந்த முயற்சியை மேற்கொள்வது என்பது இயலாது எனவும் அவர் கூறியுள்ளார்.

ஒருவேளை, நாங்கள் உருவாக்கும் குரல் ஒலியை ஒத்து, அவரது குரல் இல்லாமலும் இருக்கலாம். ஏன் என்றால், அவரது நாக்குப் பகுதி முற்றிலும் சிதைந்துவிட்டது. ஒருவரது குரல் வளத்துக்கு நாக்கு என்பது மிகவும் முக்கியம். இந்த மதகுரு தனது 50வது வயதில் உயிரிழந்திருக்கக் கூடும். இவருக்கு மிக மோசமான பல் பிரச்னைகளும், பல் ஈரு சம்பந்தமான நோய்களும் இருந்திருக்கக் கூடும் என்றும் கண்டறியப்பட்டுள்ளது என்கிறார்.


மக்கள் கருத்து

அருண்Jan 25, 2020 - 08:46:50 PM | Posted IP 106.2*****

செத்தவன விடுங்க மக்களே. இருக்குறவன காப்பாத்துங்க.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory